OUR CLIENTS
பொதுத்துறை மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் கட்டாய காலியிட அறிவிப்பை பதிவு செய்ய வலியுறுத்தல்
பொதுத்துறை மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் கட்டாய காலியிட அறிவிப்பை பதிவு செய்ய வலியுறுத்தல் Posted on 11-Jul-2017 பொதுத்துறை மற்றும் தனியார் துறை நிறுவனங்கள்  கட்டாய காலியிட அறிவிப்பை பதிவு செய்ய வலியுறுத்தல்

வேலூர், ஜூலை 11-
வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களிலுள்ள அனைத்துப் பொதுத்துறை மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் கட்டாய காலியிட அறிவிப்புச் சட்டத்தின் கீழ் மூன்று மாதத்திற்கு ஒருமுறை இ. ஆர் -1 அறிக்கையினை, வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.

 அவ்வாறு அறிக்கையினை அனுப்பி வைப்பது அந்தந்த நிறுவனங்களின் பொறுப்பாகும். அறிக்கை அனுப்பாத நிறுவனங்களின் மீது கட்டாயக் காலியிட அறிவிப்புச் சட்ம் 1996-ன்படி நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் வழிமுறைகள் உள்ளன.

மேற்படி, செய்திக் குறிப்பில் 30.06.2017 உடன்  முடிவடைந்த காவத்திற்குறிய அறிக்கையினை இக்கடிதத்துடன் இணைக்கப்பட்டுள்ள இ. ஆர் 1 படிவத்தில் ஆண் , பெண் , மொத்தம் ஆகிய 
விவரங்களை பூர்த்தி செய்து இவ்வலுவலத்திற்கு அனுப்பும்படியும் மற்றும் அதே விவரத்தினை இணையதள முகவரியான employmentexchange.tn.gov.in/Empower-ல் உள்ளீடு செய்து  தங்களுக்கு அனுப்பபட்ட கடிதத்தின் அஞ்சல் முகவரில் குறிப்பீட்டுள்ள அடையாள சொல்லான (user-ID,VLD0000000) மற்றும் கடவுச் சொல்லான ''abcd@123'' (password) கொண்டு Employer Market  ibfo என்ற இடத்தில் click  செய்து ER-1 Form Entry  என்ற menu-வில் சென்று Employers Details  என்று குறிப்பிடப்பட்டதற்கு கீழ் Current Quater  என்ற காலத்தில் ஆண் , பெண் மொத்தம் என்ற விவரத்தினை குறிப்பிட்டு அதன் கீழ் குறிப்பிட்டுள்ள கலங்களையும் பூர்த்தி செய்து save  செய்ய வேண்டும். 

தற்போது தனியார் துறை மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் 30.06.2017 முடியும் காலத்திற்கான இ.ஆர். 1 அறிக்கைளை வேலூர் , மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.  இவ்வாறு, வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சி.ஆ. ராமன்., இ. ஆ. ப., அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளார்.

Label