OUR CLIENTS
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் திறன் பயிற்சி
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் திறன் பயிற்சி Posted on 11-Jul-2017 வேலைவாய்ப்பு அலுவலகத்தில் திறன் பயிற்சி

வேலூர், ஜூலை 11-
வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலவலகம் தற்பொழுது தொழில்நெறி வழிகாட்டும் மையமாக செயல்பட்டு வருகிறது. 

இத்தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலம் இன்றைய இணைய தலைமுறையினருக்கு உயர்கல்வி, வேலைவாய்ப்பு, போட்டித் தேர்வுகள், சுயவேலைவாய்ப்பு மற்றும் தொழில்திறன் ஆகிய குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த திறன் வாரம் ஜூலை 10 முதல் 15 வரை கொண்டாடப்படுகிறது.

11.07.2017 செய்வாய்கிழமை அன்று பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு திறன் பயிற்சி குறித்த விழிப்புணர்வு நடத்தப்பட உள்ளது. 12.07.2017 புதன்கிழமை பெண்களும் திறன்பயிற்சியை பெறும் வகையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு திறன்பயிற்சி குறித்த நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. 

13.07.2017 வியாழக்கிழமை அன்று வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் திறன் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு தனியார் துறைகளில்  வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. 14.07.2017 வெள்ளிக்கிழமை அன்று மாற்றுத் திறனாளிகளுக்கும் திறன்பயிற்சியை பெற்று வாழ்கையில் முன்னேறும் வகையில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு  விழிப்புணர்வு நடத்தப்பட உள்ளது.

15.07.2017 சனிக்கிழமை உலக திறன் (World skilled Day ) வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலத்தில் கொண்டாடப்பட உள்ளது.  மேலும் , இவ்வார முழுவதும் திறன்பயிற்சி குறித்த விழிப்புணர்வு அளிக்கும் வகையில் வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இதற்கென பிரத்யோகமான ஒரு தொழில்திறன் பயிற்சி குறித்த வழிகாட்டுதல் பிரிவுஅமைக்கப்பட்டு செயல்பட உள்ளது. இவ்வாய்ப்பினை வேலைநாடும் இளைஞர்கள் பயன்படுத்தி திறன் பயிற்சில் சேர விரும்புவோர் மின்னஞ்சல் www.tnskill.tn.gov.in-ல் பதிவு செய்து கொள்ளுமாறு,வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சி.அ. ராமன்,  வெளியிள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Label