OUR CLIENTS
சிலிண்டரின் எடையை பரிசோதிக்க சமையல் எரிவாயு சப்ளை செய்பவர்களிடம் தராசு கொடுத்தனுப்ப வேண்டும்!
சிலிண்டரின் எடையை பரிசோதிக்க சமையல் எரிவாயு சப்ளை செய்பவர்களிடம் தராசு கொடுத்தனுப்ப வேண்டும்! Posted on 11-Jul-2017 சிலிண்டரின் எடையை பரிசோதிக்க சமையல் எரிவாயு  சப்ளை செய்பவர்களிடம் தராசு கொடுத்தனுப்ப வேண்டும்!

கிருஷ்ணகிரி, ஜூலை 11-
எல்பிஜி (எரிவாயு சிலிண்டர்) வினி யோகஸ்தர்கள், நுகர்வோர் சிலிண்டரின் எடையை பரிசோதிக்க தங்களது பணியாளர்களிடம் தராசு கொடுத்தனுப்ப வேண்டுமென விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எடைகள், பொட்டலப் பொருட்கள் குறித்து நுகர்வோருக்கு வேண்டும் விழிப்புணர்வு என்ற தலைப்பில் துண்டு பிரசுரம் வினியோகிக்கப்பட்டு வருகிறது. 
இதுகுறித்து கிருஷ்ணகிரி தொழிலாளர் ஆய்வர் கோட்டீஸ்வரி, முத்திரை ஆய்வர் அசோக்குமார் ஆகியோர் கூறியதாவது: 

தமிழக தொழிலாளர் துறையால் எடை கற்கள், அளவைகள் ஆகியவற்றின் பயன்பாட்டுக்காக 2009ம் ஆண்டு சட்டமுறை எடையளவு சட்டம், 2011ம் ஆண்டு சட்டமுறை எடையளவு சட்டம் (பொட்டலப் பொருட்கள்) விதிகள் ஆகியவை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. 

இச்சட்டத்தின்கீழ் தராசுகள், எடை கற்கள், மின்னணு தராசுகள், அளவைகள் ஆகியவை கடைகள், நிறுவனங்கள், பேரங்காடிகள், பேக்கரிகள் உள்ளிட்ட இடங்களில் முறையாக சட்ட விதிமுறைக்குட்பட்டு பயன்படுத்தப்படுகிறதா? என்பது குறித்து தொழிலாளர் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். 

இந்நிலையில், எடைகள், பொட்டலப் பொருட்கள் குறித்து நுவர்வோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் துண்டு பிரசுரம் வெளியிடப்பட்டுள்ளது. அதில், எந்த ஒரு பொருளையும் வாங்கும்போது, மின்னணு தராசின் குறியீடு 0ல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். 

பொட்டலப் பொருட்களை கடையிலிருந்து வாங்கும்போது உரிய அறிவிக்கைகள் அச்சிடப்பட்டுள்ளனவா? என சரிபார்த்து வாங்க வேண்டும். எடையளவுகளில் வாங்கும் பொருட்கள் மற்றும் பொட்டலப்பொருட்களில் எடை துல்லியத்தை வணிகர் வசம் உள்ள தராசில் வைத்து பரிசோதிக்க வேண்டும்.

 எடையளவுகளை நுகர்வோருக்கு நன்கு தெரியும்படியும், சுத்தமாகவும் வைத்திருக்க வேண்டும். நுகர்வோர் எடை பரிசோதனை செய்ய ஏதுவாக பிரிண்டிங் வசதியுடன் தனியாக மின்னணு தராசு வைத்திருக்க வேண்டும். குறிப்பாக எல்பிஜி (எரிவாயு சிலிண்டர்) வினியோகஸ்தர்கள், நுகர்வோர் சிலிண்டரின் எடையை பரிசோதிக்க தங்களது பணியாளர்களிடம் தராசு கொடுத்தனுப்ப வேண்டும்.

 சினிமா தியேட்டர்கள், கடைகள், ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்கும் போது, சரியான அளவில் வழங்கப்படுகிறதா? அறிவிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக விற்பனை செய்யப்படுகிறதா? என்பதை உறுதி செய்த பின்பு வாங்க வேண்டும் என்பது உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் இடம்பெற்றுள்ளது. இதனை நுகர்வோர் படித்து பயன்பெற வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Label