OUR CLIENTS
100 நாள் வேலையில் 6 மாதமா சம்பளம் கட்
100 நாள் வேலையில் 6 மாதமா சம்பளம் கட் Posted on 11-Jul-2017 100 நாள் வேலையில்  6 மாதமா சம்பளம் கட்

திண்டுக்கல், ஜூல 11-
ஆத்தூர் காமராசர் நீர்த்தேக்கத்தில் தண்ணீர் பச்சை நிறமாக மாறியதால் பொதுமக்கள், விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

செம்பட்டி அருகே ஆத்தூர் மேற்குதொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது காமராசர் நீர்த்தேக்கம். 24 அடி மட்டம் கொள்ளளவு கொண்ட இந்த நீர்த்தேக்கம் திண்டுக்கல் மாநகராட்சியின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது. மேற்தொடர்ச்சி மலையில்  புல்லாவெளி, மணலூர், தாண்டிக்குடி, பெரும்பாறை பகுதியில் பெய்யும் மழைநீர் இயற்கையாகவே காமராசர் நீர்த்தேக்கதிற்கு வருவதுபோல் நீர்வரத்து வாய்க்கால்கள் உள்ளன. 

பருவமழை பொய்த்ததால் கடந்த ஒரு ஆண்டாக அணையின் நீர்மட்டம் குறைந்து கொண்டே  வந்தது. தற்போது வரலாறு காணாத அளவிற்கு அணையின் நீர்மட்டம் மைனஸ் 2 அடி ஆழத்திற்கு சென்றுவிட்டது. இதனால் அணைப்பகுதியில் உறைகிணறுகள் அமைத்து 20 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்து வந்தனர். 

தற்போது அதிலும் நீர் வற்றிவிட்டதால் திண்டுக்கல் நகர், சின்னாளபட்டி பேரூராட்சி மற்றும் சித்தையன்கோட்டை பகுதிகளில் குடிநீர் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.  
இந்நிலையில் தற்போது அணையில் உள்ள நீர் பச்சை நிறத்தில் பாசி படிந்தது போல் காட்சியளிக்கிறது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

எனவே இதனை உடனே ஆய்வு செய்யவும், அணையிலிருந்து தண்ணீர் எடுத்து விநியோகம் செய்யும் போது, அதை முறைப்படி சுத்தம் செய்து குளோரின் கலந்து விநியோகம் செய்யவேண்டும் என்று சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Label