OUR CLIENTS
காவல்துறை பெண் அதிகாரிகளுக்கு பெண் போலீஸ் டிரைவர்கள் நியமனம்!
காவல்துறை பெண் அதிகாரிகளுக்கு பெண் போலீஸ் டிரைவர்கள் நியமனம்! Posted on 11-Jul-2017 காவல்துறை பெண் அதிகாரிகளுக்கு பெண் போலீஸ் டிரைவர்கள் நியமனம்!

கோயம்புத்தூர், ஜூலை 11-
கோவையில் அனைத்து மகளிர் போலீஸ் போலீஸ் ஸ்டேஷன்,  சைபர் கிரைம், நில அபகரிப்பு தடுப்பு பிரிவு, போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் ஸ்டேஷன்களில பணியாற்றும் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர்களுக்கு இதுவரை ஆயுதப்படை போலீசார் ஜீப் டிரைவர்களாக பணியாற்றி வந்தனர்.

 கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின் பேரில், பெண் இன்ஸ்பெக்டர்களுக்கு பெண் போலீசார் டிரைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கோவை மாநகரில் ஆயுதப்படையில் பணியாற்றி வரும்  பிரேமலதா, கலைச்செல்வி, செல்வராணி, ரம்யா, வனிதா ஆகியோர் நேற்று முதல் ஜீப் டிரைவர்களாக நியமிக்கப்பட்டனர். 

இவர்களுக்கு ஒரு மாத டிரைவிங் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. வழித்தட விவரங்கள் தெரிவிக்கப்பட்டது. பெண் போலீசார் வாகன ஓட்டும் திறன் சோதிக்கப்படும். பெண் போலீஸ் டிரைவர்களை ரோந்து பணிகளுக்கு பயன்படுத்துவது குறித்தும் போலீஸ் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

Label