OUR CLIENTS
எல்லை பிரச்சனையால் மாதக்கணக்கில் தேங்கும் குப்பை
எல்லை பிரச்சனையால் மாதக்கணக்கில் தேங்கும் குப்பை Posted on 11-Jul-2017 எல்லை பிரச்சனையால் மாதக்கணக்கில் தேங்கும் குப்பை

கம்பம், ஜூலை 11-
 கம்பம் சின்னவாய்க்கால் தெருவில் குவிந்துள்ள குப்பைகளால் பொதுமக்கள் முகம் சுளித்து வருகின்றனர். எல்லை பிரச்சனையில் இந்த குப்பைகள் அள்ளப்படாமல் இருப்பதாக மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். கம்பம் அருகே உள்ளது காமயகவுண்டன்பட்டி பேரூராட்சி.

 இங்கு 15 வார்டுகள் உள்ளன. இதில் 15 வது வார்டில் 4வது வார்டின் ஒரு பகுதியும், 28வது வார்டின் ஒரு பகுதியும் உள்ளன. கம்பத்தில் இருந்தாலும் இப்பகுதி காமயகவுண்டன்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்டதாக உள்ளது. வீட்டுவரி உட்பட அனைத்தும் காமயகவுண்டன்பட்டி பேரூராட்சி வசூல் செய்கிறது, இப்பகுதியில் குப்பை கழிவுகள் கொட்டுவதற்கு குப்பை தொட்டிகள் வைக்கப்படவில்லை. இதனால் பாதையோரத்தில் குப்பைகள் கொட்டப்படுகின்றனர். 

வார்டு எல்லை பிரச்சனையால் இங்குள்ள குப்பைகள் நீண்ட நாட்களாக அகற்றப்படாததால் துர்நாற்றம் வீசுகிறது. காமயகவுண்டன்பட்டி பேரூராட்சியிலிருந்து இப்பகுதி மூன்று கிலோமீட்டர் தொலைவிலுள்ளதால் குப்பை கழிவை அகற்ற மாதம் இருமுறை துப்புரவு பணியாளர்கள் வந்து செல்கின்றனர். 

கம்பம் நகராட்சியின் 28 வது வார்டின் ஒரு பகுதியாக இருந்தாலும் சுகாதாரப்பணிகளில் கம்பம் நகராட்சி இப்பகுதியை கண்டுகொள்வதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. எனவே இப்பகுதியில் உள்ள குப்பை கழிவை அகற்றவும், முறையான சாக்கடை வடிகால் வசதி ஏற்படுத்தித்தரவும் காமயகவுண்டன்பட்டி பேரூராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Label