OUR CLIENTS
எல்லை தாண்டி புதுச்சேரி சரக்கு ஊடுருவல் கிராமங்களை குறிவைக்கும் மர்ம கும்பல்!
எல்லை தாண்டி புதுச்சேரி சரக்கு ஊடுருவல் கிராமங்களை குறிவைக்கும் மர்ம கும்பல்! Posted on 11-Jul-2017 எல்லை தாண்டி புதுச்சேரி சரக்கு ஊடுருவல் கிராமங்களை குறிவைக்கும் மர்ம கும்பல்!

விழுப்புரம், ஜூலை 11-
 தமிழகத்தில் டாஸ்மாக் மூடுனா என்ன? இருக்கவே, இருக்கு புதுச்சேரி  சரக்கு என குடிமகன்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

 வெளிமாநில மது கடத்தலை  தடுக்க எத்தனை சோதனைச்சாவடிகள், நடமாடும் சோதனைச் சாவடிகள் அமைத்தாலும்  புதிய வழித்தடங்களை உருவாக்கிய மது, சாராய வியாபாரிகள் தமிழகத்திற்கு லாரி,  லாரிகளாக மதுபாட்டில்கள் இறக்குமதி செய்கின்றனர். தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக கடந்த சில  ஆண்டுகளாக எதிர்ப்பும், போராட்டமும் நடந்துவந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்  உத்தரவு இதற்கு ஆறுதல் அளிக்கும் வகையில் இருந்தது. 

நீதிமன்ற உத்தரவால்  மாநில, மத்திய சாலையோரமுள்ள கடைகள் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாஸ்மாக் மூடப்பட்டது.  மாவட்டத்துக்கு 200 கடைகள் செயல்பட்டு வந்த நிலையில் 30, 50 கடைகளாக  குறைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில்  ஏற்பட்டுள்ள டாஸ்மாக் மது தட்டுப்பாட்டை போக்க புதுச்சேரி மதுபாட்டில்கள்  இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன.  புதுச்சேரியில் மாதம்தோறும் 18 லட்சம் லிட்டர் மது பயன்பாடு  இருந்தாலும், உள்ளூர் மக்கள், ஆறு லட்சம் லிட்டர்தான் அருந்துகின்றனர்.  மூன்றில், இரண்டு பங்கு மது அருந்துவது சுற்றுலாபயணிகளும், சட்ட விரோதமாக  வாங்கி செல்பவர்கள் மட்டுமே.

 இது ஒருபுறமிருக்க புதுச்சேரி சரக்கை  தமிழகத்துக்குள் கடத்தி வந்து காசு பார்ப்பவர்களும் உண்டு. தற்போது  தமிழகத்தில் நிலவும் டாஸ்மாக் மது தட்டுப்பாட்டை சாதகப் படுத்திய அதிகளவிலான  வியாபாரிகள் உருவாக துவங்கியுள்ளனர். இதனால் தற்போது புதுச்சேரியிலிருந்து  சாராயம், எரிசாராயம் உள்ளிட்ட சகல பானங்களும் தமிழகத்துக்குள் தங்கு  தடையின்றி கடத்தப்படுவதாக கூறப்படுகிறது. 

தமிழக -& புதுச்சேரி எல்லையோரமுள்ள  மாவட்டங்களான விழுப்புரம், கடலூர், நாகை, திருவாரூர், காஞ்சிபுரம்  போன்ற மாவட்டங்களின் எல்லைகள் வழியாகவே புதுச்சேரி சரக்குகள் தமிழகத்திற்கு  கரைபுரண்டு வந்துகொண்டிருக்கின்றன. கடந்த வாரம் 5 ஆயிரம் குவாட்டர் பாட்டில்கள் சேலத்துக்கு கடத்தப்பட்டது விழுப்புரத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. குறிப்பாக விழுப்புரம், கடலூர்  மாவட்ட எல்லைகள் வழியாகவே மதுகடத்தல்  ஊடுருவிகிறது. 

விழுப்புரம்  மாவட்டத்தில் 8 மதுவிலக்கு சோதனைச் சாவடிகள் அமைத்த நிலையில்  30க்கும் மேற்பட்ட வழிகள் தமிழக _ புதுச்சேரியை இணைக்கும் வகையில் உள்ளது.  இதனால் எவ்வளவு சோதனைச்சவாடிகள் அமைத்தாலும் ஒன்றும் நடக்காது.  மது,  சாராயம், ஸ்பிரிட் கடத்துவதற்கென தனி வியாபாரிகள் இருமாநிலங்களிலும்  செயல்பட்டு வருகின்றனர். இவர்களில் மொத்த வியாபாரிகள்  எல்லையை கடப்பதற்காக  மது விலக்கு பிரிவு, உள்ளூர்  போலீஸ் என அனைவரையும் முறையாக கப்பம்கட்டி  விட்டு, பாக்கெட்டுகளையும் நிரப்பிவிடுகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தின் கிராமப்பகுதிகளை குறிவைத்து இந்த விற்பனை நடக்கிறது.  

 கடத்திவரப்படும் ஸ்பிரிட்டில் அவர்களே குவாட்டர்களை(போலி மது) தயார்  செய்தும் விற்பனை செய்கிறார்கள். இதே போல் சாராயத்தை மூட்டைகளில்  எடுத்துவந்து பாக்கெட்டுகளில் கட்டி ரூ.30க்கு 200 மில்லி சாராயத்தை  விற்பனை செய்கின்றனர். விலை மலிவு என்பதால் சாராயத்திற்கும் பெரும்  கிராக்கி ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக சாராயபாக்கெட்டுகளுடன் ஆட்சியர்,  எஸ்பியிடமும் புகார் அளித்துள்ளனர்.

Label