OUR CLIENTS
தமிழக இந்து அறநிலையத்துறை கோயில்களில் உண்டியல் திறப்பதை வீடியோவில் பதிவு செய்ய கோரிக்கை!
தமிழக இந்து அறநிலையத்துறை கோயில்களில் உண்டியல் திறப்பதை வீடியோவில் பதிவு செய்ய கோரிக்கை! Posted on 11-Jul-2017 தமிழக இந்து அறநிலையத்துறை கோயில்களில் உண்டியல் திறப்பதை வீடியோவில் பதிவு செய்ய கோரிக்கை!

சேலம், ஜூலை 11-
தமிழகத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் உண்டியல் திறப்பதை வீடியோவில் பதிவு செய்ய வேண்டும் என்று பூசாரிகள் நலச்சங்கம் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது. 

இது குறித்து கோயில் பூசாரிகள் நலச்சங்க தலைவர் வாசு,  அறநிலையத்துறை அமைச்சருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பது: தமிழகத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில், உண்டியல் காணிக்கை எண்ணப்படும்போது வீடியோவில் பதிவு செய்ய வேண்டும் என்று ஆணையர் உத்தரவிட்டுள்ளார். 

இந்த உத்தரவை பெரும்பாலான அதிகாரிகள் பின்பற்றுவதில்லை. தற்போது பெரும்பாலான கோயில்களில் உண்டியல் திறப்பின்போது பக்தர்களை வைத்துக்கொள்வதில்லை. உண்டியல் திறப்பிற்கு பக்தர்கள் சென்றால் அனுமதிப்பதில்லை. அதிகாரிகள் உண்டியல் எண்ணுவதற்கு தொடர்ந்து குறிப்பிட்ட குழுவை அழைத்து எண்ணுகின்றனர். ஆய்வாளர்களிடம் இருக்கும் உண்டியலுக்கு வைக்கப்படும் சீல் இலாகா முத்திரையை ஆய்வு செய்ய வேண்டும்.

இனிவரும் காலங்களில் ஆய்வாளரிடம் உள்ள இலாகா முத்திரை, மாவட்ட அலுவலகத்தில் உள்ள லாக்கரில் வைத்து, தேவைப்படும்போது மட்டும் எடுத்து செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 உரிய அதிகாரிகள் இல்லாமல் உண்டியல் திறக்க கூடாது. சிறிய, பெரிய கோயில்கள் என்று அனைத்து கோயில்களிலும் உண்டியல் எண்ணுவதை வீடியோவில் பதிவு  செய்ய வேண்டும். இரட்டை பூட்டு அதிகாரியாக வேறு துறையை சேர்ந்த அதிகாரியை கலந்து கொள்ள செய்ய வேண்டும். 

 பழைய நடைமுறையை மீண்டும் கொண்டு வரவேண்டும். இவ்வாறு செய்தால் உண்டியல் திறப்பு நேர்மையான முறையில் நடக்கும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Label