OUR CLIENTS
மழை வேண்டி பிரம்ம தீர்த்த குளத்தில் 108 சிவாச்சாரியார்கள் வருண ஜெபம்
மழை வேண்டி பிரம்ம தீர்த்த குளத்தில் 108 சிவாச்சாரியார்கள் வருண ஜெபம் Posted on 11-Jul-2017 மழை வேண்டி பிரம்ம தீர்த்த குளத்தில் 108 சிவாச்சாரியார்கள் வருண ஜெபம்

 திருவண்ணாமலை, ஜூலை 11-
 மழை வேண்டி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில், 108 சிவாச்சாரியார்கள் வருண ஜெபம் செய்தனர். 

திருவண்ணாமலை மாவட்டம், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில், மழை வேண்டியும், உலக நன்மைக்காகவும், ரமேஷ் குருக்கள் தலைமையில், 108 சிவாச்சாரியர்கள் பிரம்ம தீர்த்த குளத்தில் நேற்று காலை, 7:00 மணி முதல், 9:00மணி வரை, வருண ஜெபமும், குளக்கரையில் சிறப்பு யாக பூஜையும் செய்தனர். 

அதை தொடர்ந்து யாகசாலையில் வைக்கப்பட்ட, கலச நீரை மூலவர் அருணாசலேஸ்வரர், மற்றும் உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து பூஜை செய்யப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

Label