OUR CLIENTS
விருத்தாசலம் பஸ் நிலையத்தில் தனியார் வாகனங்கள் நிறுத்தம்
விருத்தாசலம் பஸ் நிலையத்தில் தனியார் வாகனங்கள் நிறுத்தம் Posted on 11-Jul-2017 விருத்தாசலம் பஸ் நிலையத்தில் தனியார் வாகனங்கள் நிறுத்தம்

விருத்தாசலம், ஜூலை 11-
கடலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்களில் விருத்தாசலம் மிக முக்கியத்துவமான நகரமாகும். 

இங்கு ரயில் நிலையம், ஒருங்கிணைந்த நீதிமன்றங்கள், தாலுகா அலுவலகம், ஒன்றிய அலுவலகம், நகராட்சி அலுவலகம், காவல் நிலையங்கள், பிரசித்தி பெற்ற கோயில்கள், அரசு கலைக்கல்லூரி, செராமிக் தொழிற்பேட்டைகள், அரசு மற்றும் மருத்துவமனை, கல்வி நிறுவனங்கள் மற்றும் உழவர் சந்தை, காய்கறி மார்க்கெட் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடுகின்ற, அனைத்து வசதிகளும் நிறைந்த பகுதியாக விளங்கி வருகிறது. 

மேலும் சென்னை, கடலூர், புதுவை, விழுப்புரம், கும்பகோணம், சேலம், திருச்சி, மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் செல்லக்கூடிய வசதியில் பேருந்து நிலையம் அமைந்துள்ளது. இதனால் சுற்றியுள்ள 200க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் அன்றாட தேவைகளுக்காக விருத்தாசலம் வந்து செல்கின்றனர். 

இதனால் பேருந்து நிலையத்தில் தினமும் 500க்கும் மேற்பட்ட பேருந்துகள் வந்து செல்கின்றன. அவ்வாறு வந்து செல்லக்கூடிய பேருந்து நிலையத்தில் போதுமான இட வசதியும் அடிப்படை வசதிகளும் இல்லாததால் பயணிகள் மற்றும் பேருந்து நிறுத்தம் செய்யமுடியாமல் தவித்து வருகின்றன. 

இந்நிலையில், பேருந்து நிலையத்தின் அருகிலுள்ள தனியார் ஓட்டல்களுக்கு வரும் வாடிக்கையாளர்களின் கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் பேருந்து நிலையத்திற்குள் நிறுத்தப்படுகின்றன. மேலும் அந்த பகுதிகளில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளை நிறுத்துவதற்கு ஓட்டல் உரிமையாளர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

இது குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கூறியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டி வருவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் பேருந்து நிறுத்த இடம் இல்லாமல் அவதியடைந்து வருகின்றனர். மேலும் வாகனங்கள் கடந்து செல்ல முடியாமல் சாலைகளிலேயே அணிவகுத்து நிற்கின்றன. 

இதன் காரணமாக ஜங்ஷன் ரோடு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பொதுமக்கள் தினமும் அவதியடைந்து வருகின்றனர். விருத்தாசலம் பேருந்து நிலையத்திற்குள் நிறுத்தப்படும் தனியார் வாகனங்கள் மற்றும் தள்ளுவண்டிகளை தடைசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Label