OUR CLIENTS
பத்து ஆண்டுகளாகியும் பயன்பாட்டிற்கு வராத பஸ் நிலையம்
பத்து ஆண்டுகளாகியும் பயன்பாட்டிற்கு வராத பஸ் நிலையம் Posted on 11-Jul-2017 பத்து ஆண்டுகளாகியும் பயன்பாட்டிற்கு வராத பஸ் நிலையம்

கீழக்கரை, ஜூலை 11-
 ஏர்வாடி தர்ஹாவில் 10 ஆண்டுகளாக செயல்படாத பஸ் நிலையத்தை செயல்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

ஏர்வாடியில் புகழ் பெற்ற மகான் குத்பு சுல்தான் செய்யது இபுராகிம் ஒலியுல்லா தர்ஹா உள்ளது. இந்த தர்ஹாவிற்கு தினமும் வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஆயிரக் கணக்கானவர்கள் வந்து செல்கின்றனர். இவர்களை ஏற்றி வரும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் நிற்பதற்கு இடமில்லாமல் தனியார் லாட்ஜ் அருகில் நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்கி வந்தனர்.

இதைத்தொடர்ந்து கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.65.55 லட்சம் மதிப்பீட்டில் தர்ஹாவிற்கு அருகில் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டது. இதுவரை ஒரு பஸ் கூட உள்ளே செல்லாமல் பொதுமக்களுக்கு எந்த பயனும் இல்லாமல் உள்ளது. 

பஸ் நிலையத்திற்குள் பஸ்கள் உள்ளே செல்லாமல் இருப்பதால் பகலில் மதுகுடிப்போர் பாராகவும், இரவில் சமூக விரோத செயல் நடக்கும் இடமாகவும் மாறியுள்ளது. ஆகவே மாவட்ட நிர்வாகம் மற்றும் போக்குவரத்துத் துறை அதிகாரிகளும் ஏர்வாடி தர்ஹாவிற்கு  வரும் அனைத்து பஸ்களையும் பஸ் நிலையம் வரை வந்து போக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Label