OUR CLIENTS
திருப்போரூர் பேரூராட்சியில் மின் பணியாளர்கள் இல்லாததால் இருளில் மூழ்கிய தெருக்கள்
திருப்போரூர் பேரூராட்சியில் மின் பணியாளர்கள் இல்லாததால் இருளில் மூழ்கிய தெருக்கள் Posted on 11-Jul-2017 திருப்போரூர் பேரூராட்சியில் மின் பணியாளர்கள் இல்லாததால் இருளில் மூழ்கிய தெருக்கள்

திருப்போரூர், ஜூலை 11-
 காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூர் பேரூராட்சியில் 50க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. 

இவற்றில் இருந்த குழல் விளக்குகள் மற்றும் சோடியம் விளக்குகள் போன்றவை அகற்றப்பட்டு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு எல்.இ.டி. பல்புகள் கொண்ட மின் விளக்குகள் அமைக்கப்பட்டன. இவற்றை சென்னையைச் சேர்ந்த நிறுவனம் அமைத்து 3 ஆண்டுகளுக்கு பராமரிக்கும் ஒப்பந்தத்தை மேற்கொண்டது. 

பேரூராட்சி நிர்வாகத்தில் தெரு மின் விளக்கு பணியை செய்து வந்த பணியாளர்கள் மற்ற வேலைகளுக்கு மாற்றம் செய்யப்பட்டனர். கடந்த ஜூன் 31ம் தேதியுடன் இந்த ஒப்பந்தம் முடிவுற்றதை அடுத்து அந்த தனியார் நிறுவனம் வெளியேறியது. இதனால் கடந்த 6 நாட்களாக தெரு மின் விளக்குகள் பராமரிக்க பணியாளர்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. 

இதன் காரணமாக பல தெருக்களில் மின் விளக்குகள் எரியாமல் இருளடைந்து காணப்படுகிறது. குறிப்பாக மடம் தெரு, புதுத்தெரு, மார்க்கெட் தெரு, திரவுபதை அம்மன் கோயில் தெரு, வேண்டவராசி அம்மன் கோயில் தெரு, திருவஞ்சாவடி தெரு, வேம்படி வினாயகர் கோயில் தெரு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட தெருக்களில் உள்ள எல்.இ.டி. மின் விளக்குகள் பழுதடைந்து உள்ளன. இதனால் தெருக்களில் திரியும் நாய்கள் பொதுமக்களை அச்சுறுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. 

இரவு நேரப்பணிக்கு சென்று விட்டு திரும்பும் தொழிலாளர்கள் இருளில் சாலைகளில் அச்சத்துடன் செல்கின்றனர். மேலும், பல தெரு மின் விளக்குகள் எரியாததால் சட்ட விரோத காரியங்கள் தொடர வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக காவல் துறையினர் கருதுகின்றனர். 

இதனால் பேரூராட்சி நிர்வாகம் தெரு மின் விளக்குகளை பராமரிக்க தனியார் நிறுவனத்தை நியமிக்க வேண்டும் அல்லது பேரூராட்சி சார்பில் பணியாளர்களை நியமித்து பராமரிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை எழுந்துள்ளது.

Label