OUR CLIENTS
மதுரையில் மீண்டும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா தினகரன் ஆதரவாளர்கள் திடீர் பிரகடனம்!
மதுரையில் மீண்டும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா தினகரன் ஆதரவாளர்கள் திடீர் பிரகடனம்! Posted on 12-Jul-2017 மதுரையில் மீண்டும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா தினகரன் ஆதரவாளர்கள் திடீர் பிரகடனம்!

வேலூர், ஜூலை 12-
மதுரையில் மீண்டும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்துக்கு டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் ஏற்பாடு செய்திருப்பதுதான் தற்போதைய சூடான தகவல் என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

மதுரையில் கடந்த 30ம் தேதி தமிழக அரசு சார்பில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா, பாண்டி கோயில் அம்மா திடலில் மிக பிரமாண்டமாக கொண்டாடப்பட்டது. இந்த நூற்றாண்டு விழாவுக்கான ஏற்பாடுகளை மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் வடக்கு தொகுதி எம்எல்ஏ ராஜன் செல்லப்பாவும், ஜெ., பேரவை செயலாளரும், வருவாய்த்துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் இருவரும் சேர்ந்து செய்திருந்தனர். 

இவ்விழாவில் கலந்து கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 25 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியதோடு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். இந்த எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடந்து முடிந்த மூன்று தினங்களுக்கு பின்பு மதுரை டவுன் ஹால் ரோட்டில் உள்ள மீனாட்சி ஹாலில் வைத்து முன்னாள் மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான ராஜாங்கம் தலைமையில் மீண்டும் மதுரையில் கழக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடத்தலாமா என்ற ஆலோசனை கூட்டம் நடந்தது. 

இந்த கூட்டத்தில் ஒருமனதாக டிவிவி தினகரன் தலைமையில்தான் மீண்டும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் என தீர்மானத்தை நிறைவேற்றி கடந்த 7ம் தேதி ªன்னையில் தினகரனை சந்தித்து மதுரையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கேட்டுள்ளனர். இதுபற்றி முன்னாள் சோழவந்தான் தொகுதி எம்எல்ஏவான ராஜாங்கம் கூறுகையில், அரசு சார்பில் மதுரையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. 

அந்த விழாவில் எங்கள் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் தினகரனை அழைப்பார்கள் என்று மிக ஆவலோடு காத்திருந்தோம். ஆனால் அழைக்கவில்லை. இதனால் தினகரன் தலைமையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாட முடிவு செய்துள்ளோம். அதற்காக கழக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை நேரில் சந்தித்து தேதி கேட்டுள்ளோம். 

அதற்கு தினகரன் தமிழகம் முழுவதும் தற்போது சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும், அப்போது நீங்கள் நடத்தவுள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் நான் கண்டிப்பாக கலந்து கொள்வேன் என எங்களிடம் சொல்லி அனுப்பி வைத்தார். இந்த விழாவில் கழகத்தின் துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மட்டுமல்ல, அண்ணன் எடப்பாடி பழனிச்சாமியையும் அழைத்தே தீருவோம் என்றார். எது எப்படியோ மதுரையில் மிண்டும் எம்ஜிஆருடைய நூற்றாண்டு விழா கொண்டாடப்படுவது உறுதியாகி விட்டது.

Label