OUR CLIENTS
விழுப்புரத்தில் ஆகஸ்ட் 9ல் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா விளம்பர பேனர்கள், பதாகைகளில் சசிகலா படத்தை போடக்கூடாது
விழுப்புரத்தில் ஆகஸ்ட் 9ல் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா விளம்பர பேனர்கள், பதாகைகளில் சசிகலா படத்தை போடக்கூடாது Posted on 12-Jul-2017 விழுப்புரத்தில் ஆகஸ்ட் 9ல் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா விளம்பர பேனர்கள், பதாகைகளில் சசிகலா படத்தை போடக்கூடாது

விழுப்புரம், ஜூலை 12-
 எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடக்கிறது. இதனையொட்டி விளம்பர பேனர்கள், பதாகைகள் வைப்பவர்கள் சசிகலா படத்தை போடக்கூடாது என்று கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் அமைச்சர் சண்முகம் பேசினார். 

விழுப்புரம் மாவட்டத்தில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து சட்டத்துறை அமைச்சர் சண்முகம் தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. கலெக்டர் சுப்ரமணியன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் அமைச்சர் சண்முகம் பேசியதாவது: தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழாவை மதுரையில் கடந்த மாதம் 30ம்தேதி முதல்வர் தொடக்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக வரும் ஆகஸ்ட் 9ம்தேதி விழுப்புரம் மாவட்டத்தில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடக்கிறது. 

அனைத்துத் துறை அலுவலர்களும் தங்களது துறைக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை சிறப்பாக செய்து விழா நடைபெற ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள்  நடத்தி விழாவில் தமிழக முதல்வரால் பரிசுகளை வழங்க தயார் நிலையில் இருக்க  வேண்டும். 

போக்குவரத்து துறை விழா நடைபெறும் இடத்துக்கு பொதுமக்கள் வந்து செல்ல போதிய அளவில் பேருந்துகளை இயக்கவும். சுகாதாரத்துறை, கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கவும் வேண்டும். காவல்துறையினர் சிறப்பாக பாதுகாப்பு பணியை வழங்க வேண்டும், என்றார். 

தொடர்ந்து கட்சி அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி விளம்பர பேனர்கள், பதாகைகள் வைக்க கட்சியினர், எம்ஜிஆர், ஜெயலலிதா இருவரின் படங்களை பெரியதாக போட வேண்டும். மூன்றாவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் படம் போட வேண்டும். 

மற்றவர்கள் யாருடைய படத்தையும் போடக்கூடாது. நிர்வாகிகள் பெயரை வேண்டும் என்றால் போட்டுக்கொள்ளலாம். சசிகலா கட்சியைவிட்டு ஒதுங்கியிருப்பதாக கூறியுள்ளார். எனவே அவரது படத்தை போடக்கூடாது என்றார்.

Label