OUR CLIENTS
பாழடைந்த பள்ளி கட்டடம் டாஸ்மாக் பாராக மாறியது போர்க்கால அடிப்படையில் இடிக்க கோரிக்கை
பாழடைந்த பள்ளி கட்டடம் டாஸ்மாக் பாராக மாறியது போர்க்கால அடிப்படையில் இடிக்க கோரிக்கை Posted on 12-Jul-2017 பாழடைந்த பள்ளி கட்டடம் டாஸ்மாக் பாராக மாறியது  போர்க்கால அடிப்படையில் இடிக்க கோரிக்கை

பெரம்பலூர், ஜூலை 12-
 வாலிகண்டபுரத்தில் பாழடைந்த பள்ளி கட்டடம் டாஸ்மாக் பாராக மாறியது. இதை இடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் மாணவர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, வாலிகண்டபுரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி  இயங்கி வந்தது.

கடந்த 3ஆண்டுகளாக இந்த அரசு மேல்நிலைப்பள்ளி கூடுதல் இடவசதி காரணமாக சிறுகுடல் செல்லும் சாலையில் இட மாற்றம் செய்யப்பட்டு சொந்தக் கட்டடத்தில் இயங்கி வருகிறது.  இந்நிலையில் பழைய கட்டடம் பயன்பாடற்ற நிலையில் உள்ளது. ஆனால் ஓட்டுக்கட்டடம் மட்டும் ஒன்றுக்கும் பயன்படுத்தாமல் விடப்பட்டது. 

நாளடைவில் இது சிதிலமடைந்து ஓடுகள் சட்டத்தோடு சரிந்து எதிர்பாராத சூழலில் விழுகின்ற நிலையில் உள்ளது. இருந்தும் அப்பகுதி சமூக விரோதிகள் பயன்பாடற்ற பள்ளி வகுப்பறை கட்டடத்தை பாராக பயன்படுத்தி வருகின்றனர். 

மேலும் சிறுவர்கள் உள்ளே சென்று விளையாடினால் கூட சரிந்து உயிர் பலி வாங்கும் அபாயமுள்ளது. எனவே பொதுப்பணித்துறை வசமிருந்த இப்பகுதி தேசிய நெடுஞ்சாலை துறையிடம் உள்ளதாக தெரிய வருகிறது. 

இதனால் சம்மந்தப்பட்ட நிர்வாகம் டெண்டர் விடுத்து பாழடைந்த பள்ளிக்கட்டடத்தை இடிக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள், பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Label