OUR CLIENTS
திருச்சி ரௌடி புதுகையில் கைது
திருச்சி ரௌடி புதுகையில் கைது Posted on 12-Jul-2017 திருச்சி ரௌடி புதுகையில் கைது

புதுக்கோட்டை, ஜூலை 12-
திருச்சியைச் சேர்ந்த பிரபல ரௌடி புதுகையில் கைது செய்யப்பட்டார்.

திருச்சி பொன்மலைப்பட்டி அருகேயுள்ள அடைக்கல அன்னை நகர் 8வது தெருவைச் சேர்ந்தவர் எஸ். சுரேஷ் என்ற பட்டறை சுரேஷ் (37). இவர், புதுக்கோட்டையில் ஆலங்குளம் குடியிருப்பு பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகே புதுக்கோட்டை, அம்பாள்புரம் பகுதியைச் சேர்ந்த கே. மணிகண்டனிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்தாராம். 

இதுகுறித்த புகாரின் பேரில், திருக்கோகர்ணம் போலீஸார் சுரேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Label