OUR CLIENTS
ரோட்டா வைரஸ் தடுப்பு மருந்து வழங்க அரசு திட்டம்
ரோட்டா வைரஸ் தடுப்பு மருந்து வழங்க அரசு திட்டம் Posted on 12-Jul-2017 ரோட்டா வைரஸ் தடுப்பு மருந்து வழங்க அரசு திட்டம்

சென்னை, ஜூலை 12-
தமிழகத்தில் ‘ஜிகா’ வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.  

தமிழகத்தில் தொற்றுநோய் பரவுதல், காய்ச்சல் மற்றும் பருவ கால நோய்கள் குறித்த ஆய்வு கூட்டம் சென்னை எழும்பூர் குடும்ப நல பயிற்சி நிலையத்தில் நேற்று முன்தினம் நடந்தது. சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், செயலர் ராதா கிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

இந்த கூட்டத்தில், பருவ காலங்களில் ஏற்படும் நோய் பாதிப்புகள் மற்றும் காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனே சிகிச்சை அளிப்பது குறித்து அரசு மருத்துவமனை டீன்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.   அதன்பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியது: கிருஷ்ணகிரி மாவட்டம், நெட்ராபாளையத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

அவர் தீவிர கண்காணிப்புக்கு பின்னர் நலமடைந்துள்ளார். ஜிகா உயிர் கொல்லி நோய் அல்ல. அதனால் யாரும் பயப்பட தேவையில்லை. தமிழகத்தில் கேரளாவை ஒட்டிய 12 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால், டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பள்ளிகள், சுகாதார பணியாளர்கள், நடிகர்களை கொண்டு டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல் முழுவதுமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.  
குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்று போக்கு காரணமாக அதிகளவிலான உயிரிழப்புகள் ஏற்படுகிறது. எனவே இதை தடுக்க வரும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் ரோட்டா வைரஸ் தடுப்பு மருந்து வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இந்த தடுப்பு மருந்தை தமிழகத்தில் 11 லட்சம் குழந்தைகளுக்கு வழங்க இலக்கு நிர்யணிக்கப்பட்டுள்ளது.  இவ்வாறு விஜயபாஸ்கர் கூறினார்.

Label