OUR CLIENTS
3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு!
3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு! Posted on 12-Jul-2017 3  நாட்களுக்கு  மழை பெய்ய வாய்ப்பு!

சென்னை, ஜூலை 12-
மேகமாறுபாடு மற்றும் வெப்பசலனம் காரணமாக அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தின் சில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் கூறியது: மேற்கு திசை காற்றில் ஏற்பட்ட மேக மாறுபாடு மற்றும் வெப்பசலனம் காரணமாக இடி மேகங்கள் உருவாகி ஒன்றோடு ஒன்று இணைந்து கிழக்கு திசையில் நகர்கின்றன. மேலும், ஈரப்பதத்துடன் கூடிய கடல் காற்று மற்றும் வெப்பசலனம் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், மதுரை ஆகிய பகுதிகளில் நேற்றுமுன்தினம் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.  

காற்றில் நிலை நீடிப்பதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 12, 13 மற்றும் 14ம் தேதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், வட தமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.   

கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் 80 மி.மீ மழை பதிவாகியுள்ளது. வேலூர் மாவட்டம் அரக்கோணம், சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தலா 70 மி.மீ மழை பதிவாகியுள்ளது.   இவ்வாறு பாலசந்திரன் கூறினார்.

Label