OUR CLIENTS
ஜிகா வைரஸ் காய்ச்சலால் உயிருக்கு பாதிப்பு ஏற்படாது
ஜிகா வைரஸ் காய்ச்சலால் உயிருக்கு பாதிப்பு ஏற்படாது Posted on 12-Jul-2017 ஜிகா வைரஸ் காய்ச்சலால் உயிருக்கு பாதிப்பு ஏற்படாது

சென்னை, ஜூலை 12-
ஜிகா வைரஸ் காய்ச்சலால் உயிருக்கு பாதிப்பு ஏற்படாது என்பதால், பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என்று பேரவையில் சுகாதார துறை அமைச்சர் கூறினார்.

 கிருஷ்ணகிரி மாவட்டம் தளி தொகுதியில் ஜிகா வைரஸ் பாதிப்பு உள்ளது என்றும், அதைத் தடுக்க அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பாக விளக்கம் கேட்டும், எம்எல்ஏ பிரகாஷ் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார்.

இதற்கு பதிலளித்துப் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர், தளி தொகுதி அஞ்சட்டி கிராமத்தில் ஒருவருக்கு ஜிகா வைரஸ் காய்ச்சல் பாதிப்பு இருந்து, பின்னர் குணமாகிவிட்டது என்று தெரிவித்தார். இந்த காய்ச்சல் வேறு யாருக்கும் பரவக்கூடாது என்பதற்காக அந்த கிராமத்தில் இருந்து 5 கி.மீ சுற்றளவு பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார்.

சென்னையில் உள்ள கிங் நோய் தடுப்பு ஆராய்ச்சி நிலையத்தில் ஜிகா வைரஸ் காய்ச்சலுக்கான பரிசோதனை செய்யலாம் என்றும் அவர் குறிப்பிட்டார். அரசு மருத்துவமனைகளில் தேவையான மருந்துகள் கையிருப்பில் உள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.

Label