OUR CLIENTS
காங்., கூட்டத்தில் மோதல் வெடித்தது வேட்டி அவிழ்ப்பு, சட்டை கிழிப்பு!
காங்., கூட்டத்தில் மோதல் வெடித்தது வேட்டி அவிழ்ப்பு, சட்டை கிழிப்பு! Posted on 13-Jul-2017 காங்., கூட்டத்தில் மோதல் வெடித்தது வேட்டி அவிழ்ப்பு, சட்டை கிழிப்பு!

சிதம்பரம், ஜூலை 13-
 சிதம்பரத்தில் நடந்த, காங்., கூட்டத்தில் கோஷ்டி மோதல் வெடித்தது. மாநில காங்., துணைத் தலைவரின் வேட்டி அவிழ்க்கப்பட்டு, சட்டை கிழிக்கப்பட்டது.

கடலூர் தெற்கு மாவட்ட, காங்., சார்பில், கட்சி அமைப்பு தேர்தலுக்கான ஆலோசனைக் கூட்டம், சிதம்பரத்தில் உள்ள, தனியார் ஓட்டலில்  நடந்தது. தமிழக காங்., தேர்தல் பொறுப்பாளரான, ஆந்திர முன்னாள் அமைச்சர் பாப்பிராஜ், கடலூர் மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்களான, மாநில, காங்., பொதுச் செயலர்கள் செல்வம், பொன் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பங்கேற்றனர்.

முன்னாள், எம்.பி., வள்ளல்பெருமான், காங்கிரசின், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவின் மாநில ஆலோசகரும், தொழிலதிபருமான மணிரத்தினம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.மேடையில் இடம் இல்லாததால், தொழிலதிபர் மணிரத்தினம் கீழே அமர வைக்கப்பட்டார். ஆத்திரமடைந்த  மணிரத்தினம், சிறப்பு விருந்தினருக்கு மட்டும்சால்வை அணிவித்துவிட்டு பேசுகையில், ‘எனக்கு கட்சியில் முக்கியத்துவம் கொடுப்பது இல்லை; மேலிடத்தில் தெரிவித்தும் கண்டு கொள்ள மறுக்கின்றனர். 

இங்கு வந்திருப்பவர்கள் எல்லாம், கட்சிக்காரர்களே அல்ல’ என, ஆங்கிலத்தில் பேசினார்.காங்., தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பியதால், மணிரத்தினம் தன் பேச்சை நிறுத்தி, கூட்டத்தில் இருந்து வெளியேறினார். அப்போது, எதிரில் வந்த, மாநில துணைத் தலைவர் குமராட்சி செந்தில்குமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 

இருவருக்குமிடையே வாக்குவாதம் முற்றியது; மணிரத்தினத்தின் கார் டிரைவர், செந்தில்குமாரை தள்ளினார். ஆத்திரமடைந்த செந்தில்குமார், மணிரத்தினத்தின் கார் கண்ணாடியை கல்லால் அடித்து உடைத்தார்.

அப்போது, மணிரத்தினம் கோஷ்டியினர் திரண்டு வந்து, செந்தில்குமாரின் வேட்டியை அவிழ்த்து, சட்டையை கிழித்து தாக்கினர். அடி தாங்க முடியாமல் தப்பியோடிய செந்தில்குமாரை, ஜட்டியுடன் ஓட விட்டு தாக்கினார்.இதை தடுக்க முயன்ற சிலரையும், மணிரத்தினம் கோஷ்டியினர் தாக்கினர். 

இதனால், அங்கு பதற்றம் நிலவியது. போலீசார், இருதரப்பினரையும் 
விரட்டியடித்தனர்.கொஞ்ச நாட்களாக, காங்கிரசில் காணாமல் போய் இருந்த வேட்டி அவிழ்ப்பு மீண்டும் தலைதூக்கி உள்ளது, தொண்டர்கள் மத்தியில் முகசுளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

Label