OUR CLIENTS
ரூ.100 கோடி மானியம் கிடைக்குமா? அரசு மவுனத்தால் மின் வாரியம் அதிருப்தி!
ரூ.100 கோடி மானியம் கிடைக்குமா? அரசு மவுனத்தால் மின் வாரியம் அதிருப்தி! Posted on 13-Jul-2017 ரூ.100 கோடி மானியம் கிடைக்குமா?  அரசு மவுனத்தால் மின் வாரியம் அதிருப்தி!

சென்னை, ஜூன் 13-
தமிழக அரசின் மவுனத்தால், மத்திய அரசிடம் இருந்து, 100 கோடி ரூபாய் மானியம் கிடைக்குமா என்ற சந்தேகம், மின் வாரிய அதிகாரிகளுக்கு ஏற்பட்டு உள்ளது.ராமநாதபுரம் மாவட்டம், கடலாடியில், 500 மெகாவாட் திறனில், பிரமாண்ட சூரியசக்தி மின் நிலையம் அமைக்க, மின் வாரியம் முடிவு செய்துள்ளது.

துரிதகதியில் மானிய உதவி : இத்திட்டத்துக்கு தேவையான கடனை, மத்திய அரசின், ‘ரூரல் எலக்ட்ரிபிகேஷன்’ நிறுவனம் வழங்க உள்ளது. மத்திய அரசு, சூரியசக்தி மின் நிலையங்கள் அமைக்க, மானிய உதவிகளை வழங்கி வருகிறது.

அதன்படி, பிரமாண்ட சூரியசக்தி மின் நிலையங்களுக்கு, ஒரு மெகாவாட்டுக்கு, 20 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்பட உள்ளது.அதனால், இத்திட்டத்தை, மின் வாரியம் துரிதகதியில் செயல்படுத்த தயாராக உள்ள நிலையில், தமிழக அரசு அதிகாரபூர்வ ஒப்புதலை அளிக்காமல் தாமதம் செய்கிறது.

2018 மார்ச்சுக்குள் அரசாணை : இது குறித்து, மின் வாரிய அதிகாரிஒருவர் கூறியதாவது:கடலாடியில், சூரிய சக்தி மின் நிலையம் அமைப்பதன் மூலம், ஒரு மெகாவாட்டுக்கு, 20 லட்சம் ரூபாய் என, 500 மெகாவாட்டுக்கு, 100 கோடி ரூபாய் மானியம் கிடைக்கும்; அந்த மானியத்தை பெற, திட்ட பணிகளை, 2018 மார்ச்சுக்குள் துவக்க வேண்டும். 

ஆனால், இதுவரை, சூரியசக்தி மின் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்து, தமிழக அரசு அரசாணை வெளியிடவில்லை. அந்த ஆணையை வைத்து தான், மத்திய அரசிடம் மானியத்துக்கு விண்ணப்பிக்க முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.

Label