OUR CLIENTS
மதுக்கடைகளால் மக்கள் அவதி! ‘பார் ஊராக’ மாறிய பாகூர்!
மதுக்கடைகளால் மக்கள் அவதி! ‘பார் ஊராக’ மாறிய பாகூர்! Posted on 13-Jul-2017 மதுக்கடைகளால் மக்கள் அவதி! ‘பார் ஊராக’ மாறிய பாகூர்!

புதுச்சேரி, ஜூலை 13-
பாகூர் பகுதியில் திறக்கப்பட்டுள்ள அதிக எண்ணிக்கையிலான மதுக் கடைகளால், பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, புதுச்சேரியில் தேசிய நெடுஞ்சாலைகளில் இயங்கி வந்த 164 மதுக்கடைகள் மூடப்பட்டன. அந்த கடைகள் நெடுஞ்சாலைகளுக்கு அருகில் உள்ள பகுதிகளில் திறக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, பாகூர் பகுதிகளில், 27 மதுபானக் கடைகளும், 9 சாராயக்கடைகளும் திறக்கப்பட்டுள்ளன. சோரியாங்குப்பம் கிராமத்தில் ஒரே இடத்தில் ஏராளமான மதுக்கடைகள் திறக்கப்பட்டதால், எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் நடத்திய மறியல் போராட்டம், வன்முறையாக மாறியது.

பாகூர் தொகுதி ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,வான தனவேலு, சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடரில், பாகூர் தொகுதியில் மதுக்கடைகள் அதிகளவில் திறக்கப்படுவதை சுட்டிக்காட்டி, ‘பாகூரா அல்லது பார் ஊரா’ என வருத்தம் தெரிவித்தார். பாகூரில் புதிதாக மதுக்கடைகள் திறக்க அனுமதிக்கூடாது என, வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

ஆராய்ச்சிக்குப்பம், முள்ளோடை, பரிக்கல்பட்டு ஆகிய பகுதிகளில் புதியதாக மதுக்கடைகள் மற்றும் சாராயக்கடைகள் திறக்கப்பட்டன. அதையடுத்து, எம்.எல்.ஏ., தனவேலு தலைமையில், கடந்த 1ம் தேதி, பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து, தனவேலு கூறும்போது, ‘குடியிருப்பு பகுதிகளிலும், கோவில், கல்வி நிறுவனங்கள் அருகிலும் திறக்கப்பட்டுள்ள மதுக்கடைகளை மூட வேண்டும். இதுதொடர்பாக, வழக்கு தொடர உள்ளேன். பிரச்னைக்குரிய கடைகளை மூடும் வரை போராட்டம் தொடரும்‘ என, தெரிவித்தார்.

முதல்வர் முன்னிலையில் ‘டிஷ்யூம்‘ mஅளவுக்கு அதிக எண்ணிக்கையிலான, மதுக்கடைகளை திறக்க விட மாட்டேன் என, ஆளுங்கட்சி எம்.எல்.ஏ., தனவேலு போராட்டத்தில் குதிக்க, ஆளுங்கட்சியை சேர்ந்த மற்றொரு எம்.எல்.ஏ., மதுக்கடை அதிபர்களுக்கு ஆதரவாக முதல்வரை சந்தித்து பேசியுள்ளார்.

இதன் எதிரொலியாக, முதல்வர் முன்னிலையிலேயே, இரு எம்.எல்.ஏ.,க்களும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில், நாற்காலியை உயர்த்தும் அளவிற்கு பிரச்னை வலுத்துள்ளது.ஏற்கனவே, தனவேலு கோபத்தில் இருந்ததால், ஆளுங்கட்சி வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து, முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மற்றும் சில எம்.எல்.ஏ.,க்கள், தனியார் ஓட்டலில்,தனவேலுவை அழைத்து பேசி, சமாதானம் செய்து வைத்துள்ளனர்.

Label