OUR CLIENTS
வைரமுத்துவுக்கு தொலைபேசி வாயிலாக ஸ்டாலின் வாழ்த்து
வைரமுத்துவுக்கு தொலைபேசி வாயிலாக ஸ்டாலின் வாழ்த்து Posted on 13-Jul-2017 வைரமுத்துவுக்கு தொலைபேசி வாயிலாக ஸ்டாலின் வாழ்த்து

சென்னை, ஜூலை 13-
திமுகவின் செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று (13/07/2017)  பிறந்தநாளையொட்டி கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார்.

வைரமுத்துவை வாழ்த்தி, மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில்,  திரைப்பாடல்கள் வழியாகவும், இலக்கியப் படைப்புகள் வழியாகவும் தமிழர்களின் நெஞ்சில் நிலைத்து நின்று, தமிழின் பெருமையை இந்திய அளவிலும் உலக அளவிலும் உயர்த்தும் பணியில் சிறப்பாகவும் பொறுப்பாகவும் செயல்பட்டு வரும் கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சிறந்த பாடலாசிரியராக 7 முறை தேசிய விருது பெற்ற சாதனையாளர். மத்திய - மாநில அரசுகளின் விருதுகள் பலவற்றைப் பெற்ற பெருமைக்குரியவர். சமூக அக்கறையுடன் ஏராளமான படைப்புகளை வழங்கி வருபவர். தமிழில் புதுமையான முயற்சிகளை மேற்கொண்ட வெற்றியாளர்.

பன்முகத்தன்மை கொண்ட வைரமுத்து, கருணாநிதியை தனது தமிழ் ஆசானாக ஏற்று, திராவிட இயக்கத்தின் வழிவந்த படைப்பாளியாகத் தன்னை முன்னிறுத்தியவர். அத்தகையப் பெருமைக்குரிய வைரமுத்து இன்னும் பல சிறந்த படைப்புகளைத் தமிழுக்கு வழங்கும் வகையில் பல்லாண்டுகள் வாழ அன்புடன் வாழ்த்துகிறேன்.
இவ்வாறு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

Label