OUR CLIENTS
அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!
அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்! Posted on 13-Jul-2017 அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள்  சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

வேலூர், ஜூலை 13-
ஜிடிஎஸ் ஊழியர்களுக்கு துரோகம் செய்யும் இலாகாவையும், அரசாங்கத்தையும் கண்டித்து நமது மத்திய, மாநில சங்கங்களின் அறைகூவலுக்கு இணங்க கிராமிய அஞ்சல் ஊழியர்களின் ஊதிய விகிதங்களை பரிசீலித்திட அரசால் அமைக்கப்பட்ட கமேஷ்சந்திரா அறிக்கை அரசிடம் 28&-11&-2016  அன்று அளிக்கப்பட்டது.

 அறிக்கையின் சாதகமான பரிந்துரைகளை அமல்படுத்திடக்கோரி மத்திய சங்கம் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்திய பின்னரும், அரசு அறிக்கையில் அமலாக்கத்தை தாமதப்படுத்தி வந்தது. இறுதியாக 25.04.2017 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் நடத்திட அரசுக்கு நோட்டீஸ் கொடுத்து போராட்டத்திற்கு ஆயத்தமான றிலையில் 24.04.2017 அன்று சங்க பொதுச்செயலாளர் மஹாதேவய்யாவுடன் இலாகா நடத்திய பேச்சுவார்த்தையின்படி எழுத்துப்பூர்வமாக அளித்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. 

பொதுச்செயலரின் தொடர் நடவடிக்கையின் பயனாக மீண்டும் ஒரு மறு ஆய்வுக்கு இலாகாவால் அமைக்கப்ட்டு அந்த குழுவுக்கு கமிட்டி அறிக்கையின் மீது சில திருத்தங்கள் செய்திடவேண்டி பொதுச்செயலாளரால்  ஒரு கோரிக்கை மனு அளிக்ககப்பட்டது. தொடர்ந்து பல்வேறு அரசியல் தலைவர்களையும், பாராளுமன்ற உறுப்பினர்களையும் சந்தித்து சங்கத்தின் நிலைமையை விவரித்ததின் விளைவாக கோரிக்கையின் நியாயத்தை உணர்ந்து கமிட்டி அறிக்கையின் உடனடியாக அமல்படுத்திடவேண்டி பரிந்துரை கடிதங்கள் அரசுக்கு அளித்துள்ளனர். 

தற்போது ஜேஎஸ்&எஃப்ஏ -ஒப்புதல் பெற்று நிதியமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. நிதியமைச்சகம் மேலும் காலதாமதப்படுத்தி வருகிறது. எனவே, ஆகஸ்ட் 15-ம் தேதிக்குள் 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அமலாக்கம் செய்யாவிட்டால் ஆகஸ்ட் 16 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்வது என்று மத்திய சங்கம் முடிவெடுத்துள்ளது. ஆகவே , சங்கத்தினர் பெருந்திரளாக கலந்துகொண்டு கோரிக்கைகள் வெற்றிபெறச் செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம். 

ஜிடிஎஸ் ஊழியர்கள்  2007க்கு முன்பு என்எஃபிஇ  தொழிற்கங்கத்தில்தான் பயணித்திருந்தோம். அவர்கள் நமக்கு செய்த துரோகத்தைதான் சுற்றிக்கை 8-ல் சுட்டிக்காட்டி இருந்தோம். என்எஃப்பிஇ  சங்கத்தில் இருந்து 2007-க்கு பிறகு ஜிடிஎஸ் ஊழியர்களை  தூக்கி எறியப்பட்ட பின்பு ஏஐஜிடிஎஸ்யூ சங்கம் தனித்தே செயல்பட்டு 20 கோரிக்கைளை வென்றெடுத்தது. 

உதாரணமாக ஊழியர்களுக்கு போனஸ் தொகை 7000 கிடைக்காது சம்பளமே 7000 இல்லை. ஆகையால் அவர்களுக்கு போனஸ் தொகை 7000 கிடையாது என்று கூறியவர்கள் இலாகா ஊழியர்கள் ,ஆனால் பொதுச்செயலரின் செயல்பாட்டால்  பலகட்ட போராட்டங்கனை நடத்தி இலாகா ஊழியர்களுக்கு இணையான போனசை பெற்றனர். 

இது சங்கத்துக்கு கிடைத்த வெற்றி  அல்லவா. இவ்வாறு பல கோரிக்கைகளை தனித்தே வென்றுறெடுத்தது. இதையெல்லாம் பொறுத்துகொள்ளாத என்எஃப்பிஇ பி4 சங்கம் ஒரு தொழிற்சங்கம் நாகரீகமற்ற  அநாகரீமான வார்த்தைகளை பயன்படுத்தி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. 

இதை வேலூர் கோட்ட ஏஐஜிடிஎஸ்யூ சங்கம் வன்மையாக கண்ணடிக்கிறது. இதை கண்டித்து வேலூரில் நேற்று மாலை தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. கோட்ட தலைவர் மூர்த்தி, கோட்ட பொருளார் செல்வகுமார், கோட்ட செயலாளர் வி.முனிரத்தினம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

Label