OUR CLIENTS
தலைமைச் செயலகத்தில் எம்பிக்களுடன் முதல்வர் ஆலோசனை! ஓபிஎஸ் அணியினரும் பங்கேற்பு!
தலைமைச் செயலகத்தில் எம்பிக்களுடன் முதல்வர் ஆலோசனை! ஓபிஎஸ் அணியினரும் பங்கேற்பு! Posted on 13-Jul-2017 தலைமைச் செயலகத்தில்  எம்பிக்களுடன்  முதல்வர் ஆலோசனை! ஓபிஎஸ் அணியினரும் பங்கேற்பு!

சென்னை, ஜூலை 13- 
தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் எம்பிக்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதில் ஓபிஎஸ் அணி எம்பிக்கள் உள்பட 20க்கும் மேற்பட்ட எம்பிக்கள் கலந்து கொண்டுள்ளனர்.

தற்போதுள்ள குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் முடிவடையும் நிலையில், வரும் 17ம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் ராம் நாத் கோவிந்துவை ஆதரிப்பது என அதிமுக அம்மா அணி மற்றும் அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணியினர் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 20க்கும் மேற்பட்ட எம்பிக்கள் கலந்து கொண்டுள்ளனர். இதில் ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த எம்பிக்களும் பங்கேற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அதிமுக அம்மா அணியில் உள்ள வேணுகோபால், நவநீதிகிருஷ்ணன், விஜயகுமார், வெங்கடேஷ் பாபு உள்பட 20-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் பங்கேற்றனர். 

வரும் திங்கள் கிழமை குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து நாடாளுமன்றக் கூட்டத் தொடரும் தொடங்கவுள்ளதால், அதுகுறித்து ஆலோசித்ததாகக் கூறப்படுகிறது. வரும் குடியரசுத் தலைவர் தேர்தலில், அதிமுக அம்மா அணி பாஜக வேட்பாளரான ராம்நாத் கோவிந்தை ஆதரிப்பதாக தெரிவித்துது குறிப்பிடத்தக்கது.

Label