OUR CLIENTS
செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் இருப்பு தொடர்ந்து அதிகரிப்பு
செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் இருப்பு தொடர்ந்து அதிகரிப்பு Posted on 13-Jul-2017 செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் இருப்பு தொடர்ந்து அதிகரிப்பு

திருவள்ளூர், ஜூலை 13- 
சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகள் உள்ள பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் இருப்பு அதிகரித்து வருகிறது.

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் நேற்று நள்ளிரவு திடீரென பலத்த மழை கொட்டியது. தொடர்ந்து விடிய விடிய சாரல் மழை பெய்து வருகிறது. இதேபோல் திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழை கொட்டி தீர்த்தது. செம்பரம்பாக்கம், பூந்தமல்லி, திருவள்ளூர், பொன்னேரி, செம்பரம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பரவலாக மழை பெய்தது.

 நேற்று காலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் திருவள்ளூரில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகள் உள்ள பூண்டி, செம்பரம்பாக்கம், சோழவரம், புழல் பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக செம்பரம்பாக்கத்தில் 90 மி.மீட்டர் மழையும், குறைந்தபட்சமாக பள்ளிப்பட்டில் 11 மி.மீட்டர் மழையும் பதிவானது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் இருப்பு அதிகரித்து வருகிறது.

நேற்று காலை நிலவரப்படி ஏரியில் 78 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. நேற்று காலை 56 மில்லியன் கனஅடி மட்டுமே இருந்தது. மழையால் ஒரே நாளில் 22 மில்லியன் கனஅடி தண்ணீர் உயர்ந்து இருக்கிறது. ஏரியின் மொத்த கொள்ளளவு 3645 மில்லியன் கனஅடி ஆகும். மழையால் ஏரிக்கு 250 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

மழை அளவு (மில்லி மீட்டரில்) விவரம் வருமாறு:-
செம்பரம்பாக்கம்&90
பூந்தமல்லி&73
திருவள்ளூர் -62
பொன்னேரி&55
திருத்தணி&48
சோழவரம்&47
தாமரைப்பாக்கம்&47
பூண்டி&44
கும்மிடிப்பூண்டி&41
திருவாலங்காடு&41
செங்குன்றம்&32
அம்பத்தூர்&30
ஊத்துக்கோட்டை&19
ஆர்.கே.பேட்டை -18
பள்ளிப்பட்டு&11

Label