OUR CLIENTS
மேட்டூர் அணை நீர்மட்டம் 22.42 அடியாக உயர்வு
மேட்டூர் அணை நீர்மட்டம் 22.42 அடியாக உயர்வு Posted on 13-Jul-2017 மேட்டூர் அணை நீர்மட்டம் 22.42 அடியாக உயர்வு

மேட்டூர், ஜூலை 13-
மேட்டூர் அணையில் நீர்வரத்து அதிகரித்து உள்ளதால், நேற்று முன்தினம்  21.75 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று மேலும் உயர்ந்து 22.42 அடியானது.

கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரி  நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக  பரவலாக மழை பெய்து வருவதால் அங்குள்ள  கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது.

 இதனால் அந்த அணைகளில்  இருந்து தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் கடந்த மாதம் 30-ம்  தேதி 3,365 கன அடி தண்ணீர்  திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் 7-ம் தேதி மதியம் மேட்டூர் அணைக்கு 1000 கன அடியாக வந்து சேர்ந்தது.

பின்னர் படிப்படியாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து 10-ம் தேதி 2,687 கன  அடியானது. நேற்று முன்தினம் 2,919 கன அடியாக அதிகரித்த நீர் வரத்து நேற்று மேலும் உயர்ந்து 3 ஆயிரம் கன அடியானது.  அணையில்  இருந்து குடிநீர் தேவைக்காக 500 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணையில்  இருந்து திறந்து விடப்பட்டுள்ள தண்ணீரை விட அணைக்கு பல மடங்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

நேற்று முன்தினம்  21.75 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று மேலும் உயர்ந்து 22.42 அடியானது. இனி வரும் நாட்களில் தண்ணீர் வரத்து அதிகரித்தால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர வாய்ப்புள்ளது.  ஒகேனேக்கல் காவிரி ஆற்றிலும் 3 ஆயிரம் கன அடிக்கும் மேல் தண்ணீர் வருவதால் ஒகேனக்கல் மெயின் அருவி, சினிபால்ஸ் உள்பட அனைத்து அணைகளிலும்  தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் ஏராளமான சுற்றுலா பயணிகள் அங்கு குவிந்துள்ளனர். அருவிகளில் ஆனந்த குளியலிடும் அவர்கள் 
பரிசலில் உற்சாகமாக சவாரியும் சென்று மகிழ்கிறார்கள்.

Label