OUR CLIENTS
ஆலமரம் முறிந்து விழுந்ததால் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி
ஆலமரம் முறிந்து விழுந்ததால் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி Posted on 13-Jul-2017 ஆலமரம் முறிந்து விழுந்ததால் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி

சென்னை, ஜூலை 13-
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆலமரம் முறிந்து விழுந்ததில் உயிரிழந்த இருவர் குடும்பத்திற்கு தலா ரூ 1 லட்சம் நிவாரண நிதியாக வழங்கப்படும் என்று சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

தமிழக சட்டசபையில் திமுக உறுப்பினர் அரசு  பேசுகையில், காஞ்சிபுரம் மாவட்டம், செய்யூர் வட்டம், புத்திரன்கோட்டை கிராமத்தில், சாலையோரம் இருந்த ஆலமரம் விழுந்து உயிரிழந்த இருவருக்கு நிவாரணம் வழங்கவேண்டும் என்று வலியுறுத்தி பேரவையின் கவனத்தை ஈர்த்தார். 

அதற்கு சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்து பேசியதாவது:
காஞ்சிபுரம் மாவட்டம், செய்யூர் வட்டம், புத்திரன்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணி,  முருகன் மற்றும் சுதர்சனம் ஆகிய மூன்றுபேரும்  நேற்று முன்தினம் புத்திரன்கோட்டை கிராமத்திலிருந்து சூனாம்பேட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, சாலையோரத்தின் அருகே இருந்த ஆலமரம் பகுதியளவு முறிந்து விழுந்ததில்,  முருகன் என்பவர் சம்பவ இடத்திலேயும் சுப்பிரமணி என்பவர் பலத்த காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்வழியிலும் உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

அவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொண்டு, முருகன் மற்றும். சுப்பிரமணி ஆகியோரின்குடும்பத்திற்கு தலா ஒரு லட்சம் ரூபாய் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன். 

மேலும், இச்சம்பவத்தில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வரும்சுதர்சனம் என்பவருக்கு 50,000 ரூபாய் முதலமைச்சர்பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன். அவருக்கு நல்ல முறையில்சிகிச்சை அளிக்க மருத்துவமனை அதிகாரிகளுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் ஆணையிடப்பட்டுள்ளது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் இவ்வாறு முதல்வர் பேசினார்.

Label