OUR CLIENTS
கமுதி அரசு மருத்துவமனையில் போதிய இருக்கைகள், மின்விசிறிகள் இல்லை கர்ப்பிணிகள் பரிதவிப்பு!
கமுதி அரசு மருத்துவமனையில் போதிய இருக்கைகள், மின்விசிறிகள் இல்லை கர்ப்பிணிகள் பரிதவிப்பு! Posted on 13-Jul-2017 கமுதி அரசு மருத்துவமனையில் போதிய இருக்கைகள், மின்விசிறிகள் இல்லை கர்ப்பிணிகள் பரிதவிப்பு!

ராமநாதபுரம், ஜூலை 13-
கமுதி அரசு மருத்துவமனை ஸ்கேன் மையத்தில் மின் விசிறிகள் மற்றும் இருக்கைகள் போதிய அளவு இல்லாததால் கர்ப்பிணிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். 

கமுதி அரசு மருத்துவமனைக்கு, சுற்று வட்டாரத்தில் 200க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து நாள்தோறும் ஏராளமான நோயாளிகள் சிகிச்சை பெற வருகின்றனர். கமுதி அரசு மருத்துவமனை ராமநாதபுரம் மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு இணையாக 37 வகை சிகிச்சைகள் அளிக்க மருத்துவப் பரிசோதனை நிலையங்கள், நவீன மருத்துவ உப கரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் தற்போது அறுவைசிகிச்சை பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, ஸ்கேன், எக்ரே, ரத்தப் பரிசோதனை பிரிவு, இசிசி, எலும்பு முறிவு, சித்த மருத்துவம், கண் மருத்துவம், பல் மருத்துவம் , பெண்கள் குடும்ப நல அறுவை சிகிச்சை பிரிவுகளுடன் முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் மூலமும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 தற்போது மருத்துவமனையில் இயங்கி வரும் ஸ்கேன் மையத்தில் நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள் ஸ்கேன் எடுக்க வருகின்றனர். இவ்வாறு சிகிச்சைக்கு வரும் கர்ப்பிணிகளுக்கு போதிய அளவு இருக்கைகள் மற்றும் மின்விசிறிகள் இல்லை. வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மூச்சுத் திணறல் ஏற்படுவதாக நோயாளிகள், கர்ப்பிணிகள் தெரிவிக்கின்றனர். 

இதனால், வேறு வழியின்றி ஆங்காங்கே மருத்துவமனை வளாகத்தில் உள்ள மரத்தடியிலும், தரையிலும் அமர்ந்திருக்கின்றனர். இது குறித்து கர்ப்பிணிகள் கூறுகையில், “அனைத்து மருத்துவ வசதிகளும் உள்ள இந்த மருத்துவமனையில் ஸ்கேன் எடுக்க ஒரே ஒரு மருத்துவர் இருப்பதால் தொலைதூரத்தில் இருந்து வரும் நூற்றுக்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய அவலம் உள்ளது. இது குறித்து பல முறை மருத்துவமனை நிர்வாகத்திடம் எடுத்துக் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. எனவே கலெக்டர் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

Label