OUR CLIENTS
சிதம்பரத்தில் சோதனை 14 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்!
சிதம்பரத்தில் சோதனை 14 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்! Posted on 13-Jul-2017 சிதம்பரத்தில் சோதனை 14 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்!

சிதம்பரம், ஜூலை 13-
சிதம்பரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடைகளில் விற்கப்படுவதாக தகவல் கிடைத்ததையடுத்து போலீசார் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் அதிரடியாக சோதனை நடத்தினர். 

சிதம்பரம் ஓமகுளம்  பகுதியில் உள்ள மொத்த விற்பனையகம்  ஒன்றில் சிதம்பரம் ஏஎஸ்பி நிஷா, நகர இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் மற்றும் போலீசார் சோதனை  நடத்தினர். அப்போது அங்கு 32 மூட்டைகளில்  1400 கிலோ எடையிலான தடை செய்யப்பட்ட  புகையிலை பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது.  இதையடுத்து சிதம்பரம் கொத்தவால் தெருவை சேர்ந்த முகமது மைதீன்(50) என்பவர் மீது வழக்கு பதிந்து அவரை கைது செய்தனர். அங்கிருந்த ரூ.14 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் நகரில் 5 கடைகளில் சிறிய அளவில் இருந்த புகையிலை பொருட்களும்  போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோன்று சிதம்பரம் தாலுகா இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கிருஷ்ணவேணி மற்றும் போலீசார் மணலூர்,  லால்புரம், புறவழிச்சாலை உள்ளிட்ட பல்வேறு  பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனை செய்தனர். அப்போது 2 கடைகளில் இருந்த ரூ.10 ஆயிரம்  மதிப்பிலான புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

புவனகிரி: கடலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்  தட்சணாமூர்த்தி தலைமையில் சிதம்பரம் நகர் நல அலுவலர் பத்மநாபன், வட்டார  உணவு பாதுகாப்பு அதிகாரிகள் புவனகிரி குணசேகரன், நல்லூர் மாரிமுத்து,  குமராட்சி அருண்மொழி, குறிஞ்சிப்பாடி சுப்பிரமணியன், கடலூர் ரவிச்சந்திரன்,  காட்டுமன்னார்கோவில் கொளஞ்சியான், பரங்கிப்பேட்டை ஏழுமலை உள்ளிட்டோர்  புவனகிரியில் உள்ள  கடைகள், குடோன்கள் ஆகியவற்றில் சோதனை நடத்தினர். 

புவனகிரி நகரின் 7 இடங்களில் நடந்த இந்த  சோதனையில் எந்த கடையிலும் பான்மசாலா, குட்கா பொருட்கள் எதுவும்  சிக்கவில்லை. குட்கா பொருட்களை விற்பனை  செய்யக்கூடாது என கடைக்காரர்களிடம் எச்சரிக்கை விடுத்தனர்.

Label