OUR CLIENTS
கடந்த 10 ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணிபுரிந்த ஊழியர்கள் இடமாற்றம்!
கடந்த 10 ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணிபுரிந்த ஊழியர்கள் இடமாற்றம்! Posted on 13-Jul-2017 கடந்த 10 ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணிபுரிந்த ஊழியர்கள் இடமாற்றம்!

மதுரை, ஜூலை 13-
மாநகராட்சியில் ஒரே இடத்தில் பத்து ஆண்டுகளாக பணிபுரிந்த ஊழியர்களை கணக்கெடுத்து கமிஷனர் அதிரடி இடமாற்றம் செய்தார். 

மதுரை மாநகராட்சியில் ஊழியர்கள் பெரும்பாலானவர்கள் உயர்அதிகாரிகளிடம் நீண்ட நாட்களாக பணிபுரிந்து வருவது வழக்கம். இவர்கள் குறித்து பட்டியல் தயாரித்தாலும் எந்த வழியிலாவது இடமாற்ற நடவடிக்கையில் இருந்து தப்பி வந்தனர்.

 அந்த வகையில் கண்காணிப்பாளர் மற்றும் உதவி வருவாய் அலுவலர்களாக 12 பேர் பணிபுரிந்தது கமிஷனர் அனீஸ்சேகருக்கு தெரியவந்தது. மைய நகர்நல பிரிவில் இருந்த ரூத் மரகதம்பாக்யலதா மைய பொறியியல் பிரிவில் இருக்கும், கண்காணிப்பாளர் பணியிடத்திற்கு மாற்றப்பட்டார்.

மண்டலம் 4ல் உதவி வருவாய் அலுவலர் ராஜகோபால் மைய வருவாய் பிரிவின் கண்காணிப்பாளர் பணியிடத்திற்கும், முகம்மதுரஃபி, நிர்வாகப்பிரிவு கண்காணிப்பாளரிலிருந்து மண்டலம் 4ல் உதவி வருவாய் அலுவலர் பணியிடத்திற்கும் மாற்றப்பட்டார். 

அதுபோல மைய நிர்வாகப் பிரிவு கண்காணிப்பாளரில் இருந்து மண்டலம் 3 கண்காணிப்பாளராக கிருஷ்ணவேனி மாற்றப்பட்டார். மைய வருவாய் பிரிலிருந்த ராஜாராம், மண்டலம் 2ல் உதவி வருவாய் அலுவலர் பணியிடத்திற்கு மாற்றப்பட்டார். மண்டலம்4ல் கண்காணிப்பாளராக இருந்த செல்வக்குமார் மண்டலம் 3ல் உதவி வருவாய் அலுவலர் சரணவன் பணியிடத்திற்கு மாற்றப்பட்டார்.

நிர்வாகப்பிரிவு கண்காணிப்பாளர் பாலாஜி, மண்டலம் 2 கண்காணிப்பாளர் பணியிடத்திற்கு மாற்றப்பட்டார். அது‘போல மைய பொறியியல் பிரிவில் இருந்த மாலினி மைய நகர்நலப்பிரிவின் கண்காணிப்பாளர் பணியிடத்திற்கும் மண்டலம் 2ல் இருந்த கண்காணிப்பாளர் ஆனந்தம், ஒருங்கிணைந்த நிர்வாகப்பிரிவின் கண்காணிப்பாளர் பணியிடத்திற்கு மாற்றப்பட்டார்.

 அதுபோல மண்டலம் 3ல் கண்காணிப்பாளர் ராதா, ஒருங்கிணைந்த நிர்வாகப்பிரிவின் கண்காணிப்பாளர் பணியிடத்திற்கும்,  மண்டலம் 2ல் உதவி வருவாய் அலுவலர் ஆறுமுகம், மைய நிர்வாகப்பிரிவிற்கும், மண்டலம் 3ல் உதவி வருவாய் அலுவலர் பணியிடத்திலிருந்து மண்டலம் 4ன் கண்காணிப்பாளர் பணியிடத்திற்கும் அதிரடியாக மாற்றம் செய்து கமிஷனர் அனீஷ்சேகர் உத்தரவிட்டார்.

Label