OUR CLIENTS
போலீசாரின் சுமையை குறைக்கும் வகையில் தடய அறிவியல் ஆய்வகம் தருமபுரியில் அமைப்பு!
போலீசாரின் சுமையை குறைக்கும் வகையில் தடய அறிவியல் ஆய்வகம் தருமபுரியில் அமைப்பு! Posted on 13-Jul-2017 போலீசாரின் சுமையை குறைக்கும் வகையில் தடய அறிவியல் ஆய்வகம் தருமபுரியில் அமைப்பு!

தருமபுரி, ஜூலை 13-
போலீசாரின் சுமையை குறைக்கும் வகையில் தருமபுரியில் புதிய தடய அறிவியல் ஆய்வகம் கட்ட நிதி ஒதுக்கியதற்கு சேலம் எஸ்.பியை சந்தித்து அதிகாரிகள் நன்றி தெரிவித்தனர். 

சேலம் மாவட்டம், மாநகரம், தருமபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி ஆகிய பகுதிகளுக்கான தடய அறிவியல் ஆய்வகம் சேலம், மரவனேரியில் செயல்பட்டு வருகிறது. இந்த பகுதிகளில் நடக்கும் கொலை வழக்குகளில், சேகரிக்கப்படும் தடயங்களான அரிவாள், கம்பு, கல் போன்ற ஆயுதங்கள் இந்த ஆய்வகத்திற்கு கொண்டு வரப்பட்டு ஆய்வு செய்யப்படும்.

இந்நிலையில், கிருஷ்ணகிரி, தருமபுரியில் இருந்து கொண்டு வரப்படும் தடய பொருட்களை, நிபுணர்கள் ஆய்வு செய்து அறிக்கை அளிப்பர். அதுவரை இந்த பொருட்கள் இங்கேயே இருக்கும். பின்னர் நீதிமன்றத்திற்கு எடுத்து செல்வர். 

கடந்த ஆண்டு மட்டும் இப்பகுதியில் நடந்த 3 ஆயிரம் வழக்குகளில் 14 ஆயிரம் பொருட்கள் சேலத்திற்கு அனுப்பி உள்ளனர். இதனால் போலீசார் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். இதையடுத்து, தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 2 மாவட்டங்களை சேர்த்து ஒரு தடய அறிவியல் ஆய்வகம் அமைக்க வேண்டும் என, தடய அறிவியல் ஆய்வக துணை இயக்குனர் கொழிஞ்சியப்பன் அரசுக்கு கோரிக்கை வைத்தார்.

 மேலும் சேலத்தில் உள்ள தடய அறிவியல் ஆய்வகத்திற்கு, தனியாக கட்டடம் வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.  இதை ஏற்றுக் கொண்ட அரசு, சேலம் தடய அறிவியல் ஆய்வகத்திற்கு, ஜாகீர் அம்மாபாளையத்தில் புதிய கட்டடம் கட்ட ரூ.3.68 கோடி நிதி ஒதுக்கி உள்ளது.

 இதேபோல், தர்மபுரியில் தடய அறிவியல் ஆய்வகம் அமைக்க ரூ.1.59 கோடி ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, சேலம் தடய அறிவியல் ஆய்வக துணை இயக்குநர் 
கொழிஞ்சியப்பன் தலைமையில் அந்த பிரிவில் பணியாற்றக் கூடிய அதிகாரிகள், மாவட்ட எஸ்பி ராஜனை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

Label