OUR CLIENTS
ஆர்.கே.நகர் தொகுதியில் போலி வாக்காளரை நீக்காவிட்டால் நீதிமன்றத்தை அணுகுவோம் ஆர்.எஸ்.பாரதி எம்பி பேட்டி!
ஆர்.கே.நகர் தொகுதியில் போலி வாக்காளரை நீக்காவிட்டால் நீதிமன்றத்தை அணுகுவோம் ஆர்.எஸ்.பாரதி எம்பி பேட்டி! Posted on 13-Jul-2017 ஆர்.கே.நகர் தொகுதியில் போலி வாக்காளரை நீக்காவிட்டால் நீதிமன்றத்தை அணுகுவோம் ஆர்.எஸ்.பாரதி எம்பி பேட்டி!

சென்னை, ஜூலை 13-
ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்காளர் பட்டியலில் உள்ள போலி வாக்காளர்களை நீக்க வலியுறுத்தி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியை சந்தித்து திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்பி மனு அளித்தார்.

பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போது, 43,547 பேர் போலி வாக்காளர்களாக உள்ளதாக பட்டியல் தயாரித்து தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்தோம். வாக்காளர் பட்டியல் அச்சடிக்கப்பட்டு விட்டது. 

தேர்தல் நடக்கும் போது, வாக்குச்சாவடி அதிகாரிகளிடம் பட்டியல் அனுப்பி வைக்கப்படும். அப்போது, பூத் ஏஜென்ட்கள் மூலம் சரிபார்த்து கொள்ளலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது. எனவே, தேர்தல் நடக்கும் போது, ஆய்வு செய்யலாம் என்று திட்டமிட்டிருந்தோம். 

ஆனால், தேர்தல் நிறுத்தப்பட்டு விட்டது. இந்த சூழலில், செப்டம்பர் மாதம் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் மீண்டும் நடத்தப்படலாம் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.  தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு கூறினால்தான் பல்வேறு காரணங்களை கூறுகின்றனர். அதனால், தான் இப்போது, தமிழக தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து மனு அளித்துள்ளோம். 

தேர்தல் ஆணையம் உரிய பதில் தராமல் நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றத்தை அணுகுவோம்.  சென்னையில் நேற்று (நேற்று முன்தினம்) நடந்த சிறப்பு முகாம்களில் மாநகராட்சி அதிகாரி  உதவி ஆணையர் விஜயகுமார் புதிய வாக்காளர்களை மட்டும் சேர்க்கும் விண்ணப்பத்தை வழங்கிவிட்டு, வாக்காளர் பெயர்களை நீக்கும் விண்ணப்பத்தை வழங்கவில்லை.  மேலும், 23ம் தேதி மீண்டும் முகாம் நடக்கும் போது, ஆர்.கே.நகரில் தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தினோம் என்றனர்.

Label