OUR CLIENTS
உள்ளாட்சி தேர்தல் வைப்பு தொகையை திரும்ப பெறலாம் கலெக்டர் தகவல்!
உள்ளாட்சி தேர்தல் வைப்பு தொகையை திரும்ப பெறலாம் கலெக்டர் தகவல்! Posted on 13-Jul-2017 உள்ளாட்சி தேர்தல் வைப்பு தொகையை திரும்ப பெறலாம் கலெக்டர் தகவல்!

தூத்துக்குடி, ஜூலை 13-
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளாட்சித்  தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து  வைப்புத் தொகை செலுத்தியவர்கள் அத்தொகையை திரும்பப் பெற விண்ணப்பிக்கலாம் என  கலெக்டர் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்  குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் 2016ல்  அறிவிக்கப்பட்ட உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் பெறப்பட்டது. அப்போது, வேட்பாளர்களால் செலுத்தப்பட்ட தேர்தல்  வைப்புத் தொகையை தற்போது சம்பந்தப்பட்ட  தேர்தல் நடத்தும் அலுவலகங்களில் உரிய  ஆதாரத்துடன் விண்ணப்பம் செய்து உடனடியாக 
பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Label