OUR CLIENTS
காவல் நிலையம் வரும் பொதுமக்களிடம் தன்மையாக நடந்து கொள்ள வேண்டும் போலீசாருக்கு புதிய எஸ்பி அறிவுரை!
காவல் நிலையம் வரும் பொதுமக்களிடம் தன்மையாக நடந்து கொள்ள வேண்டும் போலீசாருக்கு புதிய எஸ்பி அறிவுரை! Posted on 13-Jul-2017 காவல் நிலையம் வரும் பொதுமக்களிடம் தன்மையாக நடந்து கொள்ள வேண்டும் போலீசாருக்கு புதிய எஸ்பி அறிவுரை!

திருச்சி, ஜூலை 13-
 திருச்சி மாவட்ட எஸ்பியாக இருந்த செந்தில்குமார் திருச்சி மாநகர குற்றம் மற்றும் போக்குவரத்து துணை கமிஷனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்

தொடர்ந்து சென்னை பரங்கிமலை துணை கமிஷனர் பி.எஸ்.சி கல்யாண் திருச்சி மாவட்ட எஸ்பியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். நேற்று எஸ்பி அலுவலகத்தில் புதிய எஸ்பியிடம் செந்தில்குமார், பொறுப்புகளை ஒப்படைத்தார். 

தொடர்ந்து எஸ்பி கல்யாண் திருச்சி மாவட்ட போலீசாருக்கு அறிவுரை கூறுகையில், திருச்சி மாவட்ட போலீஸ் நிலையத்தில் பொதுமக்கள் அளிக்கும் புகார்களுக்கு உடனடியாக எப்ஐஆர் மற்றும் மனு ரசீது வழங்க வேண்டும். 

சட்டம், ஒழுங்கு பிரச்னைகளை நேரில் சென்று போலீசார் உடனடியாக தீர்வு காண வேண்டும். போலீஸ் நிலையங்களுக்கு வரும் பொதுமக்களிடம் தன்மையாக நடந்து கொள்ள வேண்டும். போக்குவரத்து போலீசார் திறம்பட செயல்பட்டு பள்ளி குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கு விபத்து மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்படாதவாறு பணியாற்ற வண்டும் நெடுஞ்சாலைத்துறை போலீசார் விபத்து மற்றும் குற்றச்செயல்கள் ஏற்படாதவாறு செயல்பட வேண்டும் என்றார். 

மேலும் திருட்டு, வழிப்பறி, கொள்ளை, கொலை, ஆட்கடத்தல், வன்புணர்ச்சி, சிறுமி மற்றும் பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் பாலியல் குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்பி எச்சரிக்கை விடுத்தார். திருட்டு, வழிப்பறி, கொள்ளை, கொலை, ஆட்கடத்தல், வன்புணர்ச்சி, சிறுமி மற்றும் பெண்களுக்கு எதிராக  இழைக்கப்படும் பாலியல் குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்பி எச்சரிக்கை விடுத்தார்.

Label