OUR CLIENTS
ஆதிவாசி கிராமங்களில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் கலெக்டர் இன்னொசென்ட் திவ்யா!
ஆதிவாசி கிராமங்களில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் கலெக்டர் இன்னொசென்ட் திவ்யா! Posted on 13-Jul-2017 ஆதிவாசி கிராமங்களில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் கலெக்டர் இன்னொசென்ட் திவ்யா!

ஊட்டி, ஜூலை 13-
நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஆதிவாசி கிராமங்களில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என்று புதிதாக பதவி ஏற்றுக்கொண்ட கலெக்டர் இன்னொசென்ட் திவ்யா கூறினார்.

நீலகிரி மாவட்ட கலெக்டராக பணிபுரிந்து வந்த சங்கர், உத்தரகாண்ட் மாநிலத்தில் ஐ.ஏ.எஸ். உயர் அதிகாரிகளுக்கான 40 நாட்கள் சிறப்பு பயிற்சியை மேற்கொண்டு வருகிறார். அதன் காரணமாக மாவட்ட வருவாய் அலுவலர் பாஸ்கர பாண்டியன் கடந்த 2ந் தேதி முதல் மாவட்ட கலெக்டர் பொறுப்பை கவனித்து வந்தார்.

இந்த நிலையில் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை துணை செயலாளராக பணியாற்றி வந்த இன்னோசென்ட் திவ்யாவை நீலகிரி மாவட்ட கலெக்டராக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு புதிய கலெக்டர் இன்னோசென்ட் திவ்யா 10ம் தேதி காலை 10 மணிக்கு வந்தார். கோத்தர் இன மக்கள் தங்களது பாரம்பரிய இசையுடன் அவரை வரவேற்றனர். இதையடுத்து அவர் நீலகிரி மாவட்ட கலெக்டராக பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.

இதையடுத்து, கே.ஆர்.அர்ஜூனன் எம்.பி., மாவட்ட வருவாய் அலுவலர் பாஸ்கர பாண்டியன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளிரம்பா, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன், சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்ட இயக்குனர் அமர் குஷ்வாஹா, ஆர்.டி.ஓ.க்கள் கார்த்திகேயன் (ஊட்டி), கீதாபிரியா (குன்னூர்), தினகரன் (கூடலூர்) உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் புதிதாக பொறுப்பு ஏற்ற கலெக்டர் இன்னோசென்ட் திவ்யாவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

மாவட்ட கலெக்டராக பதவி ஏற்றுக்கொண்ட இன்னோசென்ட் திவ்யா நிருபர்களிடம் கூறியதாவது: நீலகிரி மாவட்டத்தில் புதிதாக பொறுப்பு ஏற்று உள்ளேன். இந்த மாவட்டத்தை பற்றி முழுமையான வி‌ஷயங்கள் தெரிந்துகொள்ள வேண்டி உள்ளது. ஊட்டியில் அழகான சுற்றுலா தலங்கள் இருப்பதால், சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் சுற்றுலா தலங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். 

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஆதிவாசி கிராமங்களில் அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதற்கு முக்கியத்துவம் அளிப்பேன். ஊட்டி நகரத்தை தூய்மை நகரமாக வைப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்வேன். இவ்வாறு அவர் கூறினார்.

நீலகிரி மாவட்ட கலெக்டராக தற்போது பதவி ஏற்றுள்ள இன்னொசென்ட் திவ்யா 113வது கலெக்டர் ஆவார். மேலும், இவர் மாவட்டத்தின் 5வது பெண் கலெக்டர் என்பது குறிப்பிடத்தக்கது. 

நீலகிரி மாவட்டத்தில் முதல் பெண்  கலெக்டராக ஜெயந்தி அலெக்ஸ்சாண்டர், 2வது பெண் கலெக்டராக லீனா நாயர், 3வது பெண் கலெக்டராக சுப்ரியா சாகு, 4வது பெண் கலெக்டராக அர்ச்சனா பட்நாயக் ஆகியோர் இருந்து உள்ளனர்.

Label