OUR CLIENTS
வீட்டில் பதுக்கிய 104 வெளிமாநில மதுபாக்கெட்டுகள் பறிமுதல் கட்டட தொழிலாளி கைது!
வீட்டில் பதுக்கிய 104 வெளிமாநில மதுபாக்கெட்டுகள் பறிமுதல் கட்டட தொழிலாளி கைது! Posted on 13-Jul-2017 வீட்டில் பதுக்கிய 104 வெளிமாநில மதுபாக்கெட்டுகள் பறிமுதல் கட்டட தொழிலாளி கைது!

நாமக்கல், ஜூலை 13- 
திருச்செங்கோடு அருகே வீட்டில் பதுக்கிய 104 வெளிமாநில மதுபாக்கெட்டுகள் பறிமுதல் கட்டட தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே உள்ள மோடமங்கலம் பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாதன் (50).  இவர் பெங்களூருவில் கட்டட தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது வீட்டில் மது பாக்கெட்டுகள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக திருச்செங்கோடு மதுவிலக்கு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

இதையடுத்து போலீசார் விஸ்வநாதன் வீட்டில் சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது வெளிமாநில மதுபாக்கெட்டுகளை பதுக்கி வைத்து  இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து 104 மதுபான பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த போலீசார், விஸ்வநாதன் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Label