OUR CLIENTS
ஆடி தள்ளுபடி விற்பனை என்று பொதுமக்கள் தலையில் மிளகாய் அறைக்க பார்க்கும் பிரபல ஜவுளி நிறுவனங்கள்!
ஆடி தள்ளுபடி விற்பனை என்று பொதுமக்கள் தலையில் மிளகாய் அறைக்க பார்க்கும் பிரபல ஜவுளி நிறுவனங்கள்! Posted on 14-Jul-2017 ஆடி தள்ளுபடி விற்பனை என்று பொதுமக்கள் தலையில்  மிளகாய் அறைக்க பார்க்கும் பிரபல ஜவுளி நிறுவனங்கள்!

 சென்னை, ஜூலை 14-
ஆடி என்றாலே அப்பாவி மக்களை ஆட்டிவைக்க வருகின்றது ஆடி தள்ளுபடி விற்பனை.  ஆடி தள்ளுபடி என்ற பெயரில் பொதுமக்கள் தலையில் மிளகாய் அறைக்க பார்க்கின்றன பிரபல ஜவுளி நிறுவனங்கள். 

ஆடி மாதம் என்றால் அம்மனுக்கு உகந்த மாதம் என்பார்கள். இதனால் பல மங்களகரமான காரியங்கள் நடக்கும். வரும் 17ம் தேதி திங்களன்று ஆடி மாதம் பிறக்கிறது. ஆடி வெள்ளியில் அம்மன் கோயில்களில் விசேஷங்கள் நடைபெறும். 

இதை மாற்றி யோசிக்கும் சிலர் ஆடி மாதம் என்றால் பீடை மாதம் என்றும் சொல்வதுண்டு. இதற்காகவே பல வியாபாரங்கள் சூடு பிடிக்கும் வகையில் நடைபெறுகின்றன. இதில் முக்கிய பங்கு வகிப்பது ஆடித்தள்ளுபடி என்ற பெயரில் முன்னணி ஜவுளி நிறுவனங்கள் விற்பனையை அறிவிக்கின்றன. இதில் 5 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் அனைத்து துணி வகைகளும்  விற்பனை செய்யப்படுகின்றன. 

குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் மிகவும் பழைய துணி வகைகளை தூசு தட்டி விலைப்பட்டியலை மாற்றி அமைத்து புத்தம் புது துணிவகைகள் போன்று அதாவது கிழவனுக்கு பல்செட் கட்டியதுபோல என்று கூறுவார்களே அப்டியே இந்த துணிரகங்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. இதை அறியாத அப்பாவி நுகர்வோர் தள்ளுபடி என்றதும் முண்டியடித்து கொண்டு ஜவுளி நிறுவனங்களுக்கு படையெடுக்கின்றனர். 

இதனால் ஜவுளி அதிபர் காட்டில் கனமழை பெய்து விடுகிறது. அவரும் முடையேதும் இல்லாமல் பணத்தை வாரி சுருட்டி கொள்கிறார். அதாவது ரூ.1க்கு விற்பனை செய்யப்படும் துணி ரகங்களுக்கு விளம்பரம் ரூ.1 கோடி என்பதை நுகர்வோர் யாரும் மறந்து விடக்கூடாது. குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் ஆடி வருவதற்கு முன்பே அதாவது ஒரு மாதத்துக்கு முன்பாகவே விளம்பரங்கள் நாளிதழ்கள், தொலைக்காட்சிகள், எஃப்.எம். வானொலிகளில் விளம்பரப்படுத்தப்படுகிறது. 

குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் ஆடித்தள்ளுபடியில் எடுக்கப்படும் துணிகள் ஓரிரு மாதங்களில் கிழிந்து இருக்கும் இடம் தெரியாமல் போய்விடுகின்றன. இதில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை எங்கும் விதிவிலக்கல்ல என்று சொல்லலாம். இல்லத்தரசிகள் தள்ளுபடி என்றதும் துணிக்கடைகளை நோக்கி ஓடுகின்றனர். 

மக்கிப்போன துணி காசாகிறது. உங்கள் பணம் வீணாகிறது என்பதை யாரும் உணர்வதில்லை. இது எப்படி என்று விளக்கிடும் வகையில் கூறுகிறோம் கவனியுங்கள், சிந்தியுங்கள். கடந்த 2 மாதங்களாக விளம்பரம் செய்யப்பட்டு விற்பனை தொடங்குகிறது. 

அதாவது, விளம்பரம் செய்த தொகையையும் நுகர்வோரிடம்தான் வசூலிக்கின்றனர் என்பதை ஏனோ இவர்கள் உணர மறந்துவிட்டனர். உதாரணமாக ரூ.70க்கு விற்பனையாகும் துணிகளை விலையேற்றி ரூ.200 என்று ஸ்டிக்கர் ஒட்டி அதிலிருந்து தள்ளுபடி கொடுப்பது போல ரூ.150க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் மற்ற நாட்களில் அந்த துணியின் விலையோ ரூ.70க்கு விற்பனையாவதை யாரும் மறந்துவிடக் கூடாது. ஆண்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்து கொண்டு வரும் பணத்தை இப்படி பழைய மக்கிப்போன துணிகளில் கொண்டுபோய் கொடுத்து பணத்தை வீணாக்காதீர்கள். விழிப்புணர்வுடன் செயல்படுங்கள் தாய்மார்களே.

 சிந்தித்து செயல்படுங்கள், நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்த உங்கள் பணத்தை காப்பாற்றி கொள்ளுங்கள்.  நீங்கள் தேர்வு செய்ய வேண்டியது நல்ல ஜவுளி நிறுவனங்களையே என்பதையும் மறந்துவிடக்கூடாது. அனைத்து துணிக்கடைகளுக்கும் செல்லாதீர்கள், ஏமாறாதீர்கள். ஏன் ஆடியில் மட்டும் தள்ளுபடி வழங்கப்படுகிறது என்று யோசிக்க வேண்டும். 

மற்ற மாதங்களில் தள்ளுபடி ஏன் வழங்கக் கூடாது என்பதை யோசிக்க வேண்டும். இதன் பின்னணியில்  ஆடித்தள்ளுபடி என்ற போர்வையில் மெகா மோசடி நடக்கிறது என்பது பலருக்கு தெரியாது. குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் விளம்பர தொகையை கூட விட்டுவிடாமல் பைசா வசூல் செய்து விடுகின்றனர்.

 இதுதான் ஆடித்தள்ளுபடி உண்மையான தள்ளுபடி என்று தெரிந்து கொள்ளுங்கள். விற்காத துணிகள் விற்று தீர்ந்துவிடுகின்றன, உங்கள் கையிருப்பும் கரைந்துவிடுகின்றன. ஏனெனில் அந்த துணிகள் மக்கிப்போனது என்பதால் நீங்கள் உடுத்து மகிழ முடியாது, சமையலறையில் கரித்துணியாக வேண்டுமானால் பயன்படுத்தி கொள்ளலாம்.

 இதற்காகவா ஆடித்தள்ளுபடியில் துணி எடுத்தீர்கள் என்பதை உணர வேண்டும். அவசரப்படாதீர்கள், சிந்தியுங்கள், கடையை தேர்வு செய்யுங்கள். உங்கள் பணத்தை மிச்சப்படுத்துங்கள். எந்தெந்த கடைகளில் இப்படி தில்லுமுல்லுகள் அரங்கேறுகின்றன என்பதை பெயர்களுடனும், புகைப்படங்களுடனும் விரைவில் 'காலச்சக்கரம் நாளிதழ்' விரைவில் விரிவாக வெளியிட உள்ளது. 

குறிப்பாக நுகர்வோர் ஏமாற்றமடைய கூடாது என்ற நோக்கில் இந்த செய்தி  வெளியிடப்படுகிறது.  உங்கள் அனுபவத்தில் ஏதேனும் இது போன்ற நிகழ்வுகள் நடந்திருந்தால் மற்ற வாடிக்கையாளர்கள் விழிப்புணர்வுக்காக காலச்சக்கரம்  நாளிதழ் வாயிலாக வெளியிடலாம். உங்கள் சுயவிவரம் ரகசியம் காக்கப்படும்.

Label