OUR CLIENTS
திறந்தவெளியில் கொட்டப்பட்ட மாங்கூழ் கழிவுகள்!
திறந்தவெளியில் கொட்டப்பட்ட மாங்கூழ் கழிவுகள்! Posted on 14-Jul-2017 திறந்தவெளியில் கொட்டப்பட்ட மாங்கூழ் கழிவுகள்!

போச்சம்பள்ளி, ஜூலை 14- 
போச்சம்பள்ளி அருகே தட்ரஅள்ளியில் திறந்த வெளியில் மாங்கூழ் கழிவுகளை கொட்டியுள்ளதால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

கிருஷ்ணகிரி  மாவட்டத்தில் 50 ஆயிரம் ஹெக்டேரில் மா சாகுபடி செய்யப்படுகிறது. இதில்   போச்சம்பள்ளி தாலுகா மா விளைச்சலில் 2ம் இடத்தில் உள்ளது. மாவட்டத்தில் போச்சம்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 50க்கும்  மேற்பட்ட மாங்கூழ் தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. 

போச்சம்பள்ளி சுற்று வட்டாரத்தில் விவசாயிகள் விளைவிக்கும் மாங்காய்களை, மொத்தமாக வாங்கும் வியாபாரிகள் மாங்கூழ் தொழிற்சாலைகளுக்கு சப்ளை செய்கின்றனர்.  இங்கு உற்பத்தி செய்யப்படும் மாங்கூழ் சவுதிஅரேபியா, ஏமன், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அந்த நாடுகளில் நல்ல வரவேற்பும் உள்ளது. 

போச்சம்பள்ளி அருகில் உள்ள தட்ரஅள்ளியில் செயல்பட்டு வரும் மாங்கூழ்  தொழிற்சாலை காரிமங்கலம், காவேரிப்பட்டிணம் செல்லும் மெயின் சாலையிலும்  தட்ரஅள்ளி கிராமத்தில் குடியிருப்புகளுக்கு அருகில் அமைந்துள்ளது. 

இந்த தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் மாங்கூழ்  கழிவுகளை, தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள், லாரிகள் மூலம் கொண்டு வந்து மெயின் ரோடு, விவசாய நிலங்கள் மற்றும் காலி மனைகளில் கொட்டுகின்றனர். 

ஆண்டு கணக்கிங் தேங்கியுள்ள மாங்கூழ் கழவுகளால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், ஈ, கொசுகள் உற்பத்தியாகிறது. இதனால்  தடரஅள்ளி கிராமத்தில்  வசிக்கும் மக்களுக்கு பல்வேறு தொற்று  நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

மாவட்டத்தில் பல இடங்களில் டெங்கு, மர்ம காய்ச்சல் பரவி வருவதால், தட்ரஅள்ளி கிராமத்தில் திறந்து வெளியில்  கொட்டி வைத்துள்ள மாங்கூழ் கழிவுகளை அகற்ற  வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Label