OUR CLIENTS
மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தால் தேர்வு 516 செவிலியர்களுக்கு பணி நியமன ஆணை தமிழ்நாடு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கூட்ட அரங்கத்தில் முதல்வர் பழனிசாமி வழங்கினார்
மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தால் தேர்வு 516 செவிலியர்களுக்கு பணி நியமன ஆணை தமிழ்நாடு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கூட்ட அரங்கத்தில் முதல்வர் பழனிசாமி வழங்கினார் Posted on 14-Jul-2017 மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தால் தேர்வு    516 செவிலியர்களுக்கு  பணி நியமன ஆணை  தமிழ்நாடு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கூட்ட அரங்கத்தில் முதல்வர் பழனிசாமி வழங்கினார்

சென்னை, ஜூலை 14-
முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள தமிழ்நாடு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கூட்ட அரங்கத்தில், மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்டுள்ள 516 செவிலியர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 16 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்கள்.

அரசு மருத்துவமனை களில் ஏற்படும் காலிப் பணியிடங்கள் மற்றும் அவ்வப்போது புதியதாக தோற்றுவிக்கப்படும் பணியிடங்களை உடனுக்குடன் நிரப்பும் பொருட்டு, மறைந்த முதல்வர் ஜெயலலிதா அறிவுரையின் பேரில், இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் சுகாதாரத் துறைக்கென தனியாக மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் ஜனவரி 2012-ல் அமைக்கப்பட்டது.

இந்த வாரியம், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவம் சாரா பணியாளர்கள் என இதுவரை 21,023 பணியாளர்களை தேர்வு செய்துள்ளது. அரசுப் பணியில் சேர்வதற்கு அனைவருக்கும் சமவாய்ப்பு கிடைத்திட வேண்டும் என்பதற்காக அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் செவிலியர் நிலையங்களில் செவிலியர் பயிற்சி பெற்ற மாணாக்கர்கள் அனைவருக்கும் செவிலியர் நியமனத்தில் வாய்ப்பு அளித்து 18.01.2012 அன்று ஜெயலலிதாவால் அரசாணை வெளியிடப்பட்டது.

இந்த அரசாணையின்படி, மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் இதுவரை 9,190 செவிலியர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.  இதன் தொடர்ச்சியாக, மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக தற்போது புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள 516 செவிலியர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள தமிழ்நாடு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கூட்ட அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 16 செவிலியர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Label