OUR CLIENTS
தமிழகத்தில் 35 முதல் 56 வயது வரை வேலையில்லாதவர்கள் 11.58 லட்சம் பேர்! சட்டப்பேரவையில் தமிழக அரசு தகவல்
தமிழகத்தில் 35 முதல் 56 வயது வரை வேலையில்லாதவர்கள் 11.58 லட்சம் பேர்! சட்டப்பேரவையில் தமிழக அரசு தகவல் Posted on 14-Jul-2017 தமிழகத்தில் 35 முதல் 56 வயது வரை  வேலையில்லாதவர்கள்  11.58 லட்சம் பேர்! சட்டப்பேரவையில் தமிழக அரசு தகவல்

சென்னை, ஜூலை 14- 
தமிழகத்தில் 35 வயது முதல் 56 வயது வரை வேலையில்லாமல் இருப்பவர்கள் எண்ணிக்கை 11 லட்சத்து 58 ஆயிரம் என்று சட்டசபையில் அமைச்சர் நிலோபர் கபில் தெரிவித்தார்.

தமிழ்நாடு சட்டசபையில் நேற்று தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத்துறை, மானியக்கோரிக்கை குறித்த விவாதத்தில்  காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ் கலந்து கொண்டு பேசினார்.

அவர் பேசுகையில், மீன்பிடித் தொழிலாளர்கள் கூட்டுறவுச்சங்கத்தில் சேரும் உறுப்பினர்களுக்கான வயதை 60ல் இருந்து 65 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 29,555  களப்பணியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவர்கள் தான் மக்களுடன் நேரடியாக தொடர்பு உடையவர்கள். எனவே இந்த பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.

ரப்பர் தோட்டத் தொழிலாளர் களுக்கான குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக்க வேண்டும். போக்குவரத்து தொழிலாளர்களுக்கு  ஊதியத்தை உயர்த்தி வழங்கி, அவர்களுக்கான நிலுவைத் தொகையையும் வழங்க வேண்டும்.

கடந்த 2011 ம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் இ.எஸ்.ஐ.சி. மருத்துவமனை ரூ.100 கோடியில் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்பொழுது வரை அமைக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

 அதனை அமைத்து தர வேண்டும். ஓலா நிறுவனம் பல்வேறு நபர்களின் கார்களை ஒருங்கிணைத்து வேலை வாய்ப்பினை வழங்கி வருகிறது. இதுபோன்ற அமைப்பினை ஏற்படுத்தி அரசு வேலை வாய்ப்பினை வழங்க வேண்டும் என்றார்.

அப்போது குறுக்கிட்ட அமைச்சர் நிலோபர் கபில், தமிழகத்தில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்பவர்கள் 69 லட்சம் என கூறுகின்றனர். ஆனால் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் 18 வயது வரை உள்ளவர்கள் 17,66,001 பேரும், 18 முதல் 23 வயது வரை 22,61,016 பேரும், 24 முதல் 35 வயது வரை அரசுப் பணிக்காக காத்திருப்பவர்கள் 29,56,647 பேரும், 35 முதல் 56 வயது வரை வயது முதிர்ந்த நிலையில் இருப்பவர்கள் 11,58,105 பேரும் ஆவார்கள். இவர்களில் அரசுப் பணிக்காக காத்திருப்பவர்கள் 29,56,647 பேர் மட்டும் தான். மேலும் 6 லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் பல்வேறுத்துறைகளில் பணியமர்த்தப் பட்டுள்ளதாக பதிலளித்தார்.

Label