OUR CLIENTS
ராஜஸ்தானில் 4 அரசு பேருந்துகளுக்கு தீ வைப்பு
ராஜஸ்தானில் 4 அரசு பேருந்துகளுக்கு தீ வைப்பு Posted on 14-Jul-2017 ராஜஸ்தானில் 4 அரசு பேருந்துகளுக்கு தீ வைப்பு

ஜெய்ப்பூர், ஜூலை 14-
ராஜஸ்தான் நாகாவுர் மாவட்டத்தில் 4 அரசு பேருந்துகளுக்கு நேற்று முன்தினம்  இரவு மர்ம நபர்கள் தீ வைத்தனர்.

சென்ற ஜூன் மாதம் 24 ஆம் தேதி பிரபல ரவுடி அனந்த்பால் சிங், காவல்துறை அதிகாரிகளால் சுரூ மாவட்டம் மலாசர் நகரத்தில் சுட்டுக்கொல்லப்பட்டார். இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவி வருகிறது. அவர் உடல் இதுவரை எரிக்கப்படாத நிலையில் ராஜ்புட் சமூகத்தை சேர்ந்த அனந்த்பாலின் உடல்  எரிக்கப்படவுள்ளது. 

இதனால் அப்பகுதி முழுவதும் பெரும் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.  இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த அரசு பேருந்துகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர்.

 இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்று இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திவரும் தலைமை கான்ஸ்டபிள் ஹுக்மா ராம் தெரிவித்தார். அனந்த்பாலின் குடும்பத்தினர் இந்த என்கவுண்டர் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். ராஜஸ்தான் அரசு சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. 

எனினும் அனந்த்பால் குடும்பத்தினர் தங்கள் வேண்டுகோளில் உறுதியாக உள்ளனர். மேலும் நீதிமன்ற காவலில் இருக்கும் அனந்த்பாலின் சகோதரர்கள் அவரின் இறுதி சடங்குகளில் கலந்துகொள்ள அனுமதி வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். அவர்களுக்கு அனுமதி வழங்காவிட்டால் அனந்த்பாலின் உடலை எரிவூட்டப்பட மாட்டாது  என அவர்கள் தெரிவித்துள்ளனர்.  அனந்த்பாலின் உடல் அவரின் வீட்டில் குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டுள்ளது. அந்த கிராமம் முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Label