OUR CLIENTS
கங்கை நதி தூய்மைக்கு ரூ.7 ஆயிரம் கோடி செலவானது எப்படி? சிபிஐ விசாரணை நடத்த வலியுறுத்தல்
கங்கை நதி தூய்மைக்கு ரூ.7 ஆயிரம் கோடி செலவானது எப்படி? சிபிஐ விசாரணை நடத்த வலியுறுத்தல் Posted on 14-Jul-2017 கங்கை நதி தூய்மைக்கு ரூ.7 ஆயிரம் கோடி செலவானது எப்படி? சிபிஐ விசாரணை நடத்த வலியுறுத்தல்

புதுடெல்லி, ஜூலை 14-
கங்கை நதி தூய்மை திட்டத்திற்கு 7 ஆயிரம் கோடி ரூபாய் செலவிட்டும் பெரிய அளவில் மாறுதல் ஆகாதது குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கறிஞர் வலியுறுத்தினார்.

புண்ணிய நதி, புனித நதி, இந்தியாவின் தேசிய நதி என்ற சிறப்புகளுக்கு உரியது, கங்கை நதி. உத்தரகாண்ட், உத்தரபிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம் என 5 மாநிலங்களில் 2,525 கி.மீ. தொலைவுக்கு பாய்கிற கங்கை நதி, இப்போது மாசுபட்டிருக்கிறது. 

அதன் 25 சதவீத தண்ணீர்தான் தூய்மையானது, மீதி மாசுபட்டது என்று சொல்லப்படுகிறது. இந்த புண்ணிய நதியை தூய்மைப்படுத்துவோம் என்பது பாராளுமன்ற தேர்தலின்போது பாரதீய ஜனதா கட்சி அளித்த தேர்தல் வாக்குறுதி மட்டுமல்ல, கனவுத்திட்டமும் கூட. 2020 க்குள் கங்கை நதி சுத்தம் செய்யப்படும் என்று பிரதமராகப் பதவியேற்ற போது மோடி தெரிவித்திருந்தார். இதனையடுத்து, உத்தரபிரதேசத்தில் ஹரித்வாரில் இருந்து உன்னாவோ பகுதி வரை பாயும் கங்கை நதியில் மேற்கொள்ளப்பட்ட பணிகளுக்கு சுமார் ரூ.7,000 கோடி ரூபாயை பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு செலவு செய்துள்ளது.

இந்நிலையில், பிரபல சுற்றுச் சூழல்வாதியும், வழக்கறிஞருமான மேத்தா தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். நீண்டகாலம் நடைபெற்ற இவ்வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. 

அப்போது, வழக்கறிஞர் மேத்தா, முக்கிய பிரச்சினையை எழுப்பினார். ‘பெரிய அளவிலான தொகை செலவிடப்பட்டும் கங்கை நதி தூய்மையில் பெரிய மாற்றம்  ஏற்பட்டதாக தெரியவில்லை. கங்கை நதி தூய்மைக்காக செலவிடப்பட்ட தொகை வீணாகியுள்ளது. 

இது குறித்து மத்திய அரசால் விசாரணை நடத்தப்பட வேண்டும். இந்த திட்டத்தில் பணம் எவ்வாறு செலவு செய்யப்பட்டது என்பது குறித்து சிபிஐ அல்லது சிஏசி தணிக்கை குழுவால் விசாரணை நடத்தப்பட வேண்டும்” என்று கோரிககை விடுத்தார்.  கங்கை நதி திட்டத்திற்கு ரூ.7304 கோடி செலவிட்டதாக தேசிய பசுமை தீர்ப்பாயம் தனது தீர்ப்பில் தெரிவித்ததை அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

Label