OUR CLIENTS
சீனாவுடன் மோதல், காஷ்மீர் நிலவரம் குறித்து எதிர்க்கட்சிகளுக்கு ராஜ்நாத், சுஷ்மா இன்று விளக்கம்
சீனாவுடன் மோதல், காஷ்மீர் நிலவரம் குறித்து எதிர்க்கட்சிகளுக்கு ராஜ்நாத், சுஷ்மா இன்று விளக்கம் Posted on 14-Jul-2017 சீனாவுடன் மோதல், காஷ்மீர் நிலவரம் குறித்து  எதிர்க்கட்சிகளுக்கு ராஜ்நாத், சுஷ்மா இன்று விளக்கம்

புதுடெல்லி, ஜூலை 14- 
சிக்கிம் எல்லையில் சீனாவுடன் ஏற்பட்டுள்ள பிரச்சினை, அமர்நாத் யாத்ரீகர்கள் மீதான பயங்கரவாதத் தாக்கு தலுக்குப் பிறகு ஜம்மு காஷ்மீர் நிலவரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர ராஜ்நாத் சிங், வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஆகியோர் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு  இன்று வெள்ளிக்கிழமை  விளக்கிக் கூற உள்ளனர்.

இந்தக் கூட்டத்துக்கு முக்கிய எதிர்க்கட்சி தலைவர்கள் அனை வருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சீனாவுடனான பிரச்சினை, காஷ்மீர் ஆகியவற்றில் மத்திய அரசின் நடவடிக்கைகள் குறித்து இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட உள்ளது.

வரும் 17ம் தேதி நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடங்கும் நிலையில் இந்தக் கூட்டம் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா-சீனா-பூட்டான் எல்லையில் உள்ள டோகாலாம் பகுதியில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. 

இதனால் கடந்த 3 வாரங்களாக அங்கு இருநாடுகளும் படைகளை குவித்துள்ளன. காஷ்மீரில் அமர்நாத் பக்தர்கள் மீதான பயங்கரவாதத் தாக்குதல் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் தொடர்ச்சியாக அமைதியற்ற சூழல் நிலவி  வருகிறது. கடந்த 5 மாதங்களில் பாதுகாப்புப் படையினருக்கும் பொதுமக்களும் இடையே ஏற்பட்ட மோதலில் பொதுமக்கள் 75 பேர் கொல்லப்பட்டுள்ளனர். போலீசார் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தப் பிரச்சினைகளை எல்லாம் நாடாளுமன்றத்தில் எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ள நிலையில், எதிர்க்கட்சிகளுக்கு விளக்கக் கூட்டம் இன்று நடைபெற உள்ளது.

Label