OUR CLIENTS
சிறைச்சாலை மர்மங்கள் தொடர்கின்றன மு.க. ஸ்டாலின் கருத்து
சிறைச்சாலை மர்மங்கள் தொடர்கின்றன மு.க. ஸ்டாலின் கருத்து Posted on 14-Jul-2017 சிறைச்சாலை மர்மங்கள் தொடர்கின்றன மு.க. ஸ்டாலின் கருத்து

சென்னை, ஜூலை 14-
சசிகலாவுக்கு பரப்பனா அக்ரஹாரா சிறையில் சிறப்பு சலுகைகள் தரப்பட்டதாக எழுந்த புகார் குறித்து கருத்து தெரிவித்த திமுக செயல் தலைவர் ஸ்டாலின், சிறைச்சாலை மர்மங்கள் தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கின்றன என்று கூறினார்.

திமுக செயல் தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
கேள்வி: பெங்களூரு பரப்பன அக்ரகார சிறை அதிகாரிகளுக்கு சசிகலா சார்பில் 2 கோடி ரூபாய் கொடுத்து, சிறப்பு சமையல் அறை வசதி செய்யப்பட்டு இருப்பதாக செய்திகள் வந்துள்ளன. இது பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்: இந்த ஆட்சி எப்படி நடைபெறுகிறது என்று பார்த்தால், சிறைச்சாலைகள் பற்றி அதிகம் பேசக்கூடிய நிலை வந்திருக்கிறது. பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா சிறைச்சாலை அதிகாரிகளுக்குப் பணம் கொடுத்து, சிறப்பு வசதிகள் எல்லாம் செய்து கொண்டதாக, பல செய்திகள் வந்து கொண்டு இருக்கின்றன.

ஏற்கனவே, மணல் மாஃபியா கும்பல் தலைவர் சேகர் ரெட்டி, இப்போது ஜாமீன் பெற்றுள்ளார், அவரை கொலை செய்ய சிறையில் இருப்பவர்களே திட்டம் தீட்டிக் கொண்டு இருக்கிறார்கள் என்று சிறை அதிகாரிகளே எச்சரிக்கை கொடுத்து இருக்கிறார்கள்.

இதுகுறித்து, சேகர் ரெட்டியே டி.ஜி.பி., கமிஷனர் ஆகியோரிடம் புகார் அளித்துள்ளார். அவரைக் கொல்ல முயற்சிக்கும் காரணம் என்னவென்றால், அவர் உயிரோடு இருந்தால், பல விவகாரங்கள், பல செய்திகள் எல்லாம் வெளியில் தெரிந்து விடும் என்பதால் தான் என்று ஒரு செய்தி பரவிக் கொண்டிருக்கிறது. சிறைச்சாலைகளில் மர்மங்கள் தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் தான் இந்த ஆட்சி நடக்கிறது. இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்தார்.  

Label