OUR CLIENTS
ஓ.பி.எஸ். ராட்சத கிணறுக்கு எதிர்ப்பு குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்த பெற்றோர்!
ஓ.பி.எஸ். ராட்சத கிணறுக்கு எதிர்ப்பு குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்த பெற்றோர்! Posted on 14-Jul-2017 ஓ.பி.எஸ். ராட்சத கிணறுக்கு எதிர்ப்பு குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்த பெற்றோர்!

பெரியகுளம், ஜூலை 14-
பெரியகுளம் அருகே ஓ.பன்னீர்செல்வத்துக்கு சொந்தமான கிணற்றை ஊர் மக்களுக்கு ஒப்படைக்க கோரி குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பெரியகுளம் அருகே உள்ள லட்சுமிபுரத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் தனது விவசாய தேவைக்காக ராட்சத கிணறு வெட்டினார். இதனால் லட்சுமிபுரம் பகுதியில் உள்ள மற்ற மக்களுக்கு குடிநீர் மற்றும் விவசாய தேவைக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என கூறி கடந்த 1 மாதமாக போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

லட்சுமிபுரத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்கள் தேவைக்காக ஊராட்சி சார்பில் வெட்டப்பட்ட 3 கிணறுகளும் வறண்டு விட்டன. குடிநீர் ஆதாரம் அதிகம் உள்ள கோம்பை அடிவாரப் பகுதியில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு சொந்தமான தோட்டத்தில் ஆழமாக கிணறுகளை வெட்டியதால் மற்ற கிணறுகளுக்கு தண்ணீர் கிடைக்கவில்லை என்று புகார் எழுந்துள்ளது.

எனவே ஓ.பன்னீர் செல்வம் தோட்டத்தில் வெட்டப்பட்ட கிணறை ஊர் பொதுமக்களுக்காக ஒப்படைக்கக் கோரி தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. நேற்று முன்தினம் காலை ஏராளமான ஆண்களும், பெண்களும் குழந்தைகளுடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் நடத்தியவர்களுடன் மாவட்ட கலெக்டர் வெங்கடாசலம், போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் ஆகியோர் சந்தித்து பேசினர்.

ஆனால் பொதுமக்கள் தெரிவிக்கையில், ராட்சத கிணறை கிராம மக்களுக்கு தானமாக வழங்கும் வரை போராட்டம் நடைபெறும். அதுவரை எங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம். ரேசன் கார்டுகளை ஒப்படைத்து கிராமத்தை காலி செய்து விட்டு மலையில் குடியேறி போராட்டம் நடத்துவோம் என்று தெரிவித்தனர்.

 உண்ணாவிரத போராட்டம் நடந்த போது லட்சுமிபுரம் பகுதியில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தொடர்ந்து நேற்றும் போராட்டம் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இதனால் லட்சுமிபுரம் கிராமத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

Label