OUR CLIENTS
NLC நிறுவனத்தில் பணி நாட்களை குறைப்பு ஒப்பந்த தொழிலாளர்கள் தொடரும் வேலை நிறுத்தப்போராட்டம்
NLC நிறுவனத்தில் பணி நாட்களை குறைப்பு ஒப்பந்த தொழிலாளர்கள் தொடரும் வேலை நிறுத்தப்போராட்டம் Posted on 14-Jul-2017 NLC நிறுவனத்தில் பணி நாட்களை குறைப்பு ஒப்பந்த தொழிலாளர்கள் தொடரும் வேலை நிறுத்தப்போராட்டம்

கடலூர், ஜூலை 14-
கடலூர் மாவட்டம் என்.எல்.சி. நிறுவனத்தில் பணி நாட்களை குறைத்ததைக் கண்டித்து, ஒப்பந்த தொழிலாளர்கள் 2வது நாளாக வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

என்.எல்.சி சுரங்கம் 1கி வில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் மாதம் 26 நாட்கள் பணியாற்றி வந்தனர்.  இந்நிலையில், அவர்களின் பணி நாட்களை 19 நாட்களாக என்.எல்.சி. நிர்வாகம் குறைத்துள்ளது. 

ஏற்கனவே குறைந்த ஊதியத்தில் பணியாற்றும் தங்களுக்கு பணிநாட்களை குறைத்ததுள்ளதால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக் கூறி நேற்று முன்தினம்(12&07&2017) முதல் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் இரண்டாவது நாளான நேற்றும் ஏராளமான தொழிலாளர்கள் பணிக்குச் செல்லாததால், சுரங்க பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

Label