OUR CLIENTS
தக்காளி விலையை குறைக்க நடவடிக்கை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ உறுதி
தக்காளி விலையை குறைக்க நடவடிக்கை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ உறுதி Posted on 14-Jul-2017 தக்காளி விலையை  குறைக்க நடவடிக்கை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ உறுதி

சென்னை, ஜூலை 14- 
தக்காளி விலையை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் செல்லூர் கே.ராஜூ உறுதியளித்துள்ளார்.

தக்காளி மற்றும் சின்னவெங்காயம் கிலோ ரூ. 100க்கு மேல் விற்கப்படுவதாகவும், எனவே இவற்றை கூட்டுறவு கடை மூலம் விற்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் சட்டசபையில் நேற்று வலியுறுத்தினார்.

இதற்கு பதிலளித்து பேசிய கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தக்காளி விலையை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்தார். மேலும் பண்ணை பசுமை நுகர்வோர் காய்கறி கடைகளில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ. 40க்கு விற்கப்படுதாகவும் அப்போது அமைச்சர் செல்லூர் கே.ராஜூ  தெரிவித்தார்.

Label