OUR CLIENTS
கிருஷ்ணா தண்ணீரை உடனே திறந்துவிட வலியுறுத்தி ஆந்திராவுக்கு தமிழக அரசு கடிதம்
கிருஷ்ணா தண்ணீரை உடனே திறந்துவிட வலியுறுத்தி ஆந்திராவுக்கு தமிழக அரசு கடிதம் Posted on 14-Jul-2017 கிருஷ்ணா தண்ணீரை உடனே திறந்துவிட வலியுறுத்தி ஆந்திராவுக்கு தமிழக அரசு கடிதம்

சென்னை, ஜூலை 14-
சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுவதால் கிருஷ்ணா தண்ணீரை உடனே திறந்துவிட வேண்டும் என ஆந்திர மாநில தலைமை செயலாளருக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகள் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது. கடந்த ஆண்டு இதே நாளில் 3909 மில்லியன் கன அடி தண்ணீர் இருந்தது. ஆனால் இப்போது 103 மில்லியன் கன அடி தண்ணீர் மட்டுமே உள்ளது. 

ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து ஆண்டுதோறும் தமிழகத்துக்கு 12 டி.எம்.சி. தண்ணீர் கிருஷ்ணா கால்வாயின் மூலம் பூண்டி ஏரிக்கு திறந்து விட வேண்டும். ஜனவரி முதல் ஏப்ரல் வரை 8 டி.எம்.சி.யும், ஜூலை மாதம் முதல் அக்டோபர் வரை 4 டி.எம்.சி. தண்ணீரும் கிருஷ்ணா கால்வாயில் தண்ணீர் வர வேண்டும். 

ஆனால் கண்டலேறு அணையில் தண்ணீர் குறைவாக உள்ளதால் ஆந்திர அரசு இன்னும் தண்ணீர் திறக்காமல் உள்ளது.  இதனால் தமிழக அரசு சார்பில் ஆந்திர மாநில தலைமை செயலாளருக்கு கடிதம் எழுதப்பட்டு உள்ளது. அதில் ஜூலை மாதம் முதல் தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை இந்த ஆண்டு காலதாமதமின்றி தருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Label