OUR CLIENTS
புரோக்கர்களுடன் கைகோர்த்து லஞ்சத்தில் புரளும் சூளகிரி காவல் ஆய்வாளர் சம்பத்குமார்!
புரோக்கர்களுடன் கைகோர்த்து லஞ்சத்தில் புரளும் சூளகிரி காவல் ஆய்வாளர் சம்பத்குமார்! Posted on 19-Jul-2017 புரோக்கர்களுடன் கைகோர்த்து லஞ்சத்தில் புரளும்  சூளகிரி காவல் ஆய்வாளர் சம்பத்குமார்!

கிருஷ்ணகிரி, ஜூலை 19-
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணிபுரிபவர் சம்பத்குமார். இவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு சேலம் மாவட்டத்தில் இருந்து சூளகிரி காவல் நியைத்துக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டு வந்தவர். 

அப்படி வந்த உடனேயே தனக்கு தரகர் வேலை செய்வதற்காக சூளகிரி விஏஓ அலுவலகம் எதிரில் மளிகை கடை நடத்தி வரும் மேடுப்பள்ளியைச் சேர்ந்த கேசவன் என்பவரை தனது வலது கரமாக வைத்து எப்படியெல்லாம் எங்கெல்லாம், எதற்கெல்லாம் பணம் (லஞ்சம்) வாங்க முடியுமோ அந்த வேலைக்காக அவர் வாயிலாக காய் நகர்த்தி பணம் சம்பாதிக்க ஆரம்பித்தார்.

சூளகிரி காவல் நிலையத்துக்கு வரும் புகார்கள் பெரும்பாலும் நிலம் தொடர்பான பிரச்னைகளே. இதனை பயன்படுத்தி தரகர் கேசவன் மூலம் பல புகார்தாரர்கள் மற்றும் எதிர்மனுதாரர்களிடமும் பணத்தை கறந்து விடுகிறார்.

இந்நிலையில்தான் கடந்த ஜூன் மாதம் 11ம் தேதி சூளகிரி காவல் நிலையத்துக்கு உட்பட்ட மேடுப்பள்ளி அடுத்த சென்னப்பள்ளி கிராமத்தில் மலையோரம் அமைக்கப்பட்டிருந்த பரத்சிங் என்பவருக்குச் சொந்தமான ஸ்ரீசாகம்பரி கிரானைட் கம்பெனியில் கஞ்சா செடி வளர்ப்பதாக உளவுத்துறைக்கு தகவல் வந்தது. இதையடுத்து காவல் உதவி ஆய்வாளர் யுவராஜ், தனிப்பிரிவு காவலர் பாலாஜி ஆகியோர் அந்த கம்பெனிக்கு சென்று பார்த்தபோது அங்கு வளர்ந்து வந்த 4 கிலோ கஞ்சா செடியை பறிமுதல் செய்த போலீசார் மேலாளர் முனிசியை கைது செய்து காவல் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்துவந்தனர்.

இண்டர்ஹாம் தகவல் கம்பெனி உரிமையாளர் பரத்சிங்குக்கு தகவல் போக அவர் நேராக கேசவனை தொடர்பு கொண்டு பேரம் பேசியுள்ளார். பின்னர் கேசவன் ஆய்பாளர் சம்பத்குமாரிடம் பேசி ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் லஞ்சமாக பெற்று ஆய்வாளருக்கு நள்ளிரவு 12 மணிக்கு கொடுத்து விட்டு மேலாளர் முனிசியை விடுவித்துள்ளார்.

இந்த தகவல் ஓசூர் ஏஎஸ்பி ரோஹித்நாதனுக்கு உளவுத்துறை வாயிலாக போக, அவர் உடனடியாக குற்றவாளியை கைது செய்ய உத்தரவிட்டுள்ளார். ஆய்வாளரோ பெயருக்கு அந்த கம்பெனியில் வேலை செய்யும் கூலித்தொழிலாளியான தமிழ் தெரியாத வடமாநிலத்தைச் சேர்ந்த அனுமன் என்பவரை கைது செய்துள்ளார். 

பின்னர் முதல் தகவல் அறிக்கையில், காவலர்கள் ரோந்து சென்றபோது சந்தேகத்துக்கு இடமான வகையில் சாலையில் பையுடன் நின்றிருந்த நபரை சோதனையிட்டோம். அதில் அவர் வைத்திருந்த பையில் 900 கிராம் கஞ்சா வைத்திருந்ததால் கைது செய்ததாக வழக்கு பதிவுசெய்து தமிழே தெரியாத வடமாநிலத்தைச் சேர்ந்த வாலிபரை கைது செய்துள்ளார்.

 மேலும் பறிமுதல் செய்யப்பட்ட 4 கிலோ கஞ்சாவை அப்படியே வழக்குப்பதிவு செய்தால் உங்கள் கம்பெனிக்கு சீல் வைத்து விடுவார்கள் என்று பரத்சிங்கை மிரட்டி மேலும் ரூ.1 லட்சத்து 24 ஆயிரம் பெற்றுக்கொண்டு வெறும் 900 கிராம் கஞ்சா மட்டுமே பறிமுதல் செய்ததாக கணக்கு காண்பித்துள்ளார் ஆய்வாளர் சம்பத்குமார். 

இதுமட்டுமன்றி சூளகிரி காமந்தொட்டி அருகில் உள்ள கங்காபுரம் கிராமத்தில் பிரசவத்துக்காக வந்த இடத்தில் மனைவியின் 14 வயது தங்கையையே கணவன் இழுத்துக் கொண்டு ஓடிவிட்டாராம். அப்போது அந்த மாணவியின் தந்தை சூளகிரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

பின்னர் மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் இருவரையும் பிடித்து சூளகிரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். ஆனால் காவல் ஆய்வாளர் சம்பத்குமாரோ கேசவன் வாயிலாக பேரம் பேச வைக்கிறார். எப்படியென்றால் மாணவிக்கோ 14 வயதுதான் ஆகிறது. இந்த விஷயம் வெளியில் தெரிந்தால் உனது மகள் வாழ்க்கை வீணாகிவிடும். அதேபோல் உனது மருமகனுக்கு காலம் முழுக்க சிறைதான் என்று கூறி ரூ.1 லட்சம் பெற்றுக் கொண்டு தந்தையுடன் மாணவியை அனுப்பி விட்டனர்.  அதேபோல் மாணவியை அழைத்துச் சென்றவரை மிரட்டி ரூ.1 லட்சம் வாங்கிக் கொண்டாராம் இந்த தில்லாலங்கடி ஆய்வாளர் சம்பத்குமார். இப்படி சம்பாதித்த பணத்தில் ராயக்கோட்டை அருகில் உள்ள எக்கண்டபள்ளியில் 25 ஏக்கர் நிலத்தையும் வாங்கி குவித்துள்ளாராம். 
சூளகிரி கோயில் திருவிழாவுக்கு குடித்து விட்டு போதையில் பாதுகாப்பு பணி செய்திருந்துள்ளார். மணல் கடத்தல் வழக்கில் ஆள்மாற்றி கைது செய்து குண்டர் தடுப்பு 
சட்டத்தில் கைது செய்து அடைத்த வழக்கில் 3 பேர் 
இடைநீக்கம் செய்யப்பட்ட வழக்கில் தற்போதைய ஆய்வாளர் பணத்துக்காக தமிழே தெரியாதவரை கைது செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. சம்பத்குமார் காட்டில் கனமழை பெய்கிறது

Label